தசரா பண்டிகையின் போது பிரதமர் மோடி, அரவிந்த் கேஜ்ரிவால் உருவ பொம்மையை எரிப்போம் - காங்.
டெல்லி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய பிரதமர் மோடி, மற்றும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலைக் கண்டித்து இருவரது உருவ பொம்மையை தசரா பண்டிகையன்று எரிக்கப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தசரா பண்டிகையின் போது நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மை தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது. அந்த வகையில், நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தொடர்ந்து துன்பத்தை அளித்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் உருவ பொம்மையை டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளிலும் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த உருவ பொம்மைகளின் முகத்தில் பிரதமர் மோடி, மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரின் படங்கள் ஒட்டப்படும்.
நாடு முழுவதும் ராவணனின் உருவ பொம்மை தீ வைத்துக் கொளுத்தப்படும் அதே நேரத்தில் இரண்டு தலை ராவணனாக இவர்களைக் கருதி இருவரின் உருவ பொம்மையும் எரிக்கப்படும் என்று கூறினார்.
மேலும், மத்திய அரசு சரியான நேரத்தில் தலையீடு செய்திருந்தால் பருப்பு விலை இவ்வளவு பெரிய உச்சத்தை அடைந்து இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications