டெல்லி துணை முதல்வர் அலுவலகம் அடித்து நொறுக்கி சூறை.. கணினி திருட்டு.. மர்மக் கும்பலுக்கு வலை வீச்சு
டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிவிட்டு கொள்ளையடித்துள்ளனர்.
டெல்லி: டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவகம் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதால் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி பத்பர்கஞ்ச் தொகுதியில் உள்ள வினோத் நகரில் உள்ளது துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் அலுவலகம். இந்த அலுவலகத்திற்கு நேற்று இரவு மர்ம கும்பல் ஒன்று புகுந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடியுள்ளது. மேலும், அவர்கள் வந்து போன தடயம் தெரியாமல் இருப்பதற்காக சிசிடிவி கேமராக்களை திருப்பி வைத்துவிட்டு கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். அத்துடன், அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்களும் திருடப்பட்டுள்ளன.

இந்தக் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது தெரியாமல் இன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர் ஒருவர், அலுவலகம் சூறையாடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், போலீசாருக்கு அவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, மோப்பநாயுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம கும்பல் குறித்தும் கொள்ளை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
துணை முதல்வர் சிசோடியா அலுவலகத்தில் இருந்த கணினி, முக்கிய ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர் என்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிசிடிவி கேமராவை திருப்பி வைத்துவிட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால் கொள்ளையர்களை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications