டெல்லி: பிரணாப் முகர்ஜி மகள் உட்பட 63 காங்கிரஸ் வேட்பாளர்களின் டெபாசிட் காலி!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 70 காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 வேட்பாளர்கள் தங்களின் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
டெல்லியில் மூன்று முறை தொடர்ந்து அதாவது 15 ஆண்டு காலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, இந்த சட்டசபைத் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. முட்டை வாங்கியது ஒருபுறம் இருக்க அந்தக் கட்சியின் 70 வேட்பாளர்களில் 7 பேர் மட்டுமே டெபாசிட் தொகையை பெறுகிற அளவுக்கு கவுரவமான எண்ணிக்கையில் ஓட்டுகளை பெற்றனர்.
63 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு படுகேவலமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

முதல்வர் வேட்பாளரே கோவிந்தா
அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளரான, சர்தார் பஜார் தொகுதியில் போட்டியிட்ட அஜய் மக்கான், 16,331 ஓட்டுகள் மட்டுமே பெற்று, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அது மட்டுமல்லாது டெபாசிட்டையும் இழந்தார்.
இந்த தொகுதியில், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட சோம் தத், 67,507 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவது இடம், பா.ஜ.,வின் பிரவீண் குமாருக்கு கிடைத்தது. இவர், 33,192 ஓட்டுகள் பெற்றார்.

மூத்தலைவர்கள் முக்காடு
மூத்த தலைவர்களான கிரண் வாலியா, ஹாரூண் யூசுப், யோகானந்த் சாஸ்திரி உள்ளிட்டவர்களுக்கும் டெபாசிட் கிடைக்கவில்லை.

பிரணாப்முகர்ஜி மகள்
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா முகர்ஜியும் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார்.

குறைந்த வாக்கு சதவிகிதம்
2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபைத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்தாலும் 24.7 சதவீதம் வாக்குகள் பெற்று கவுரமான நிலையில் இருந்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் இந்த தேர்தலில் 9.7 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்று படுபாதாளத்தில் விழுந்துவிட்டது.

பின்னடைவு இல்லையாம்
இது பற்றி கருத்து தெரிவித்துள்ள பி.சி.சாக்கோ டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஏற்பட்ட தோல்வி ராகுல் காந்திக்கு ஏற்பட்ட பின்னடைவு இல்லை என்று கூறியுள்ளார்.

இடதுசாரிகள் அவுட்
டெல்லியில் 15 தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரிகள் கூட்டணி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளில்அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தனர். கடந்த தேர்தலில் 5.35 சதவீதம் வாக்குகள் பெற்ற பகுஜன் சமாஸ்வாடி கட்சி இந்த முறை 1.3 சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications