டெல்லி தேர்தல் ரிசல்ட் 2025: அப்டேட்களை தெரிந்துக்கொள்ள டெய்லிஹன்ட்டுடன் இணைந்திருங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், பிப்.8ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

இந்த முறை 602 ஆண் வேட்பாளர்கள், 96 பெண் வேட்பாளர்கள், 1 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 699 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கினர். இதற்கு முன்னர் கடந்த 2020ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 668 வாக்காளர்கள் இருந்தனர். அதை ஒப்பிடும்போது இந்த முறை 31 வேட்பாளர்கள் அதிகம்.

delhi election 2025 delhi assembly election 2025

அரசியல் நிலவரத்தை பொறுத்தவரையில், என்னதான் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் தலைநகர் டெல்லியில் ஆட்சியை பிடிக்கவில்லையே என்று பாஜகவுக்கு நீண்ட காலமாக ஏக்கம் இருந்து வந்தது. எனவே இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பாஜக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது. மறுபுறம் ஆம் ஆத்மிக்கும் கடுமையான நெருக்கடி இருந்தது.

குறிப்பாக கட்சியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றிருந்தது. அதாவது டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவர்கள் பலர் மீதும் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. அதேபோல இந்த வழக்கில் ஒட்டுமொத்த கட்சியின் மீதே விசாரணை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்தியாவிலேயே ஒரு அரசியல் கட்சியின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இதுதான் முதல் முறை. அதேபோல முதலமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதும் அரவிந்த் கெஜ்ரிவால் விஷயத்தில்தான் நடந்தது.

இவையெல்லாம் இந்த தேர்தலில் எதிரொலித்தன. டெல்லியை பொறுத்தவரை 83.49 லட்சம் ஆண்கள், 71.74 லட்சம் பெண்கள் மற்றும் 1,267 மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் இருக்கின்றனர். இதில் 2.08 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் வாக்களிப்பதை எளிதாக்கும் வகையில், சில முன் முயற்சிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில், வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.

இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டெய்லிஹன்ட் உடனடி அப்டேட்களை கொடுக்கிறது. வாக்கு வித்தியாசம் என்ன? இதற்கு முன்னர் இதே தொகுதியில் வென்றவர்கள் எவ்வளவு வாக்கு பெற்றிருந்தார்கள்? என பல்வேறு தரவுகளுடன் இந்த அப்டேட்களை டெய்லிஹன்ட் வழங்குகிறது.


அப்டேட்கள் என்னென்ன?:



1.லைவ் தகவல்கள் உடனக்குடன் அப்டேட் செய்யப்படும்


2.தொகுதிகள் வாரியாக விவரமாக அப்டேட் வழங்கப்படும்

3.கடந்த தேர்தல் முடிவுடன் ஒப்பிட்ட தகவல்கள் வழங்கப்படும்

4.சோஷியல் மீடியா அப்டேட்கள், நிபுணர்களின் பகுப்பாய்வு உள்ளிட்டவையும் வழங்கப்படும்.

எனவே தேர்தல் முடிவுகளை துல்லியமாக அறிந்துக்கொள்ள டெய்லிஹன்ட்டுடன் இணைந்திருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+