டெல்லி தேர்தல்: பாஜகவுக்கு 34-40 சீட் கிடைக்கும்.. ஆம் ஆத்மிக்கு 2வது இடம் - இந்தியாடுடே
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக 34 முதல் 40 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இரண்டாவது இடம் ஆம் ஆத்மிக்குக் கிடைக்கம் என்று இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி மாதம் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை துவங்குகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் பாஜக 31 இடங்களிலும், ஆம் ஆத்மி 28 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸின் ஆதரவை பெற்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் ஆனார். ஆனால் அவர் லோக் ஆயுக்தா விவகாரம் தொடர்பாக தனது முதல்வர் பதவியை 49 நாட்களில் ராஜினாமா செய்தார். இந்நிலையில் தான் டெல்லி சட்டசபைக்கு தற்போது தேர்தல் நடக்க உள்ளது.
இந்நிலையில் இந்தியா டுடே குழுமம்-சிசேரோ கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தின. ஜனவரி 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை டெல்லியில் உள்ள 70 தொதிகளிலும் உள்ள மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கணிப்பின்படி டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு 34 முதல் 40 சீட்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 25 முதல் 31 சீட்களும், காங்கிரஸுக்கு 3 முதல் 5 சீட்களும் கிடைக்கும். டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் ஆம் ஆத்மி இன்னும் பாதிப்படையாமல் இருப்பதாக உணர முடிகிறது. அதேசமயம், காங்கிரஸின் நிலைதான் மேலும் மோசமாகியுள்ளது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications