டெல்லி மாணவி பலாத்கார வழக்கு: 4 கைதிகளையும் நாளை ஆஜர்படுத்த ஹைகோர்ட் உத்தரவு
டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை உறுதி செய்வது குறித்த விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் துவங்கியது.
டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுதாக்கப்பட்டதில் உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மைனர் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். இதில் மைனருக்கு சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மீதமுள்ள 5 பேரில் பேருந்து டிரைவர் ராம் சிங் கடந்த மார்ச் மாதம் திகார் சிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் முகேஷ்(26), அக்ஷயம் குமார்(28), பவன் குப்தா(19) மற்றும் வினய் சர்மா(20) ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 13ம் தேதி தீர்ப்பளித்தது. மேலும் நீதிபதி யோகேஷ் கன்னா இந்த தீர்ப்பை உறுதி செய்யுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டார்.
வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அளிக்கும் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அந்த 4 பேரின் மரண தண்டனையையும் உறுதி செய்வது தொடர்பான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று துவங்கியது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ரேவா கேத்ரபால், பிரதீபா ராணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அந்த 4 குற்றவாளிகளையும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு திகார் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பான வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தெரிந்தே இப்படி செய்யலாமா? அருண் ஐபிஎஸ்ஸை கண்டித்த ஹைகோர்ட்! தொழிலதிபர் மீதான குண்டர் சட்டம் ரத்து -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications