டெல்லியில் ஓபிஎஸ்க்கு கிடைத்த மரியாதை நமக்கு கிடைக்கலேயே... ஏக வருத்தத்தில் எடப்பாடி
ஓபிஎஸ்-க்கு டெல்லி தரும் முக்கியத்துவம் எடப்ப்பாடி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னை: டெல்லியில் ஓபிஎஸ்-க்கு கிடைத்த மரியாதை தமக்கு கிடைக்கவில்லையே என ரொம்பவே வருத்தத்தில் இருக்கிறாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் 3 கோஷ்டிகளுமே விழுந்து விழுந்து ஆதரவு தெரிவித்தன. அத்துடன் ராம்நாத் கோவிந்தின் வேட்புமனுத் தாக்கலுக்காக எடப்பாடி, ஓபிஎஸ் டெல்லியில் முகாமிட்டனர்.

எடப்பாடி கையெழுத்து
ராம்நாத் கோவிந்தின் வேட்புமனுவில் முன்மொழிபவர்களிடம் கையெழுத்து வாங்கும் பொறுப்பு மத்திய அமைச்சர் அனந்தகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அனந்தகுமார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போனில் அழைத்து தமது அலுவலகத்துக்கு வரவழைத்தார்.

ஓபிஎஸ்
அங்கு வைத்து எடப்பாடியிடம் கையெழுத்தி வாங்கினார் அனந்தகுமார். அதேநேரத்தில் மைத்ரேயன் வீட்டில் தங்கியிருந்த ஓபிஎஸ்ஸிடம் கையெழுத்து வாங்கி வருவதற்காக தமது செயலாளரை அனுப்பி வைத்துள்ளார் அனந்தகுமார்.

நலம் விசாரித்த மோடி
அதேபோல் வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் ஓபிஎஸ்ஸிடம் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி நலம் விசாரித்து பேசியிருக்கிறார். இந்த சம்பவங்களால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரொம்பவே வருத்தப்பட்டாராம். இருந்தபோதும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லையாம்.

அமைச்சர்கள் ஆதங்கம்
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கடந்த இரு நாட்களாக இதுதான் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. என்னதான் இருந்தாலும் ஓபிஎஸ்-க்கு டெல்லி இன்னமும் கூடுதல் மரியாதை கொடுக்கிறது..நாமதான் வலிந்து ஆதரிக்கிறோம்.. அதனால்தான் நம்மை இப்படி நடத்துகிறார்கள் என எடப்பாடி தரப்பு அமைச்சர்கள் ஆதங்கப்பட்டனராம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications