டெல்லி: 125 வேன்களில் கிலோ ரூ50க்கு விற்கும் ‘வெங்காய விற்பனை’ தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ50க்கு வேன்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் நேற்று தொடங்கியது.

வெங்காயத்தை உரித்தால் தான் கண்களில் நீர் வரும் என்ற நிலை மாறி இன்று அதன் விலையைக் கேட்டாலே மக்கள் அலருகிறார்கள். அந்தளவுக்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது வெக்காய விலை. விரைவில் தேர்தல் வர உள்ள நிலையில் இப்படி வெங்காய விலை உயர்வால் மக்களின் அதிருப்திக்கு ஆளாக விரும்பாத அரசு அறிமுகப் படுத்திய திட்டம் தான் இது.

வேன்களில் வீடு தேடி வரும் வெங்காயம், அதுவும் கிலோ ரூ50க்கு என்றால் அது நிச்சயம் மக்களுக்கு இன்ப அத்ர்ச்சியாகத்தானே இருக்கும்.

வெங்காய விலை...

வெங்காய விலை...

டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயில் இருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

அச்சம்...

அச்சம்...

எனவே, டெல்லி தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியின் தலையெழுத்தையே வெங்காய விலையுயர்வு மாற்றி அமைத்து விடுமோ? என்ற அச்சம் அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சித்தை தொற்றியுள்ளது.

குற்றச்சாட்டு....

குற்றச்சாட்டு....

டெல்லியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைவதை தடுக்கும் வகையில் டெல்லிக்கு வரவேண்டிய வெங்காய லாரிகளை மத்திய பிரதேச அரசு தடுத்து நிறுத்தி விடுவதாக கூட ஷீலா தீட்சித் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாசிக்...

நாசிக்...

இந்நிலையில், வெங்காய விளைச்சலுக்கு பெயர் பெற்ற நாசிக்கில் இருந்து டெல்லி அரசு சார்பில் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய ஷீலா தீட்சித் முடிவு செய்தார்.

புதிய திட்டம்...

புதிய திட்டம்...

தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் இப்புதிய திட்டம் குறித்து தேர்தல் கமிஷனிடம் அவர் அனுமதி வாங்கினார். அரசியல் ஆதாயத்துக்காக சலுகை விலையில் மக்களுக்கு விற்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது என தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் ஷீலா தீட்சித் குறிப்பிட்டிருந்தார்.

நேரடி கொள்முதல்...

நேரடி கொள்முதல்...

மேலும், சரக்கு பற்றாக்குறையை போக்கவே வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் சந்தை விலைக்கே டெல்லியில் விற்கப்படும் என அவர் உறுதியளித்திருந்தார்.

தேர்தல் கமிஷன் அனுமதி...

தேர்தல் கமிஷன் அனுமதி...

அந்த வாக்குறுதியை ஏற்று டெல்லி அரசே நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்ய தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது. இதனையடுத்து, நாசிக்கில் உள்ள லசல்கான் வெங்காய சந்தைக்கு டெல்லி அரசு அதிகாரிகள் சென்றனர்.

2 ஆயிரம் டன் வெங்காயம்...

2 ஆயிரம் டன் வெங்காயம்...

இதனையடுத்து, நாளொன்றுக்கு 9000 டன் வெங்காயம் பயன்படுத்தப்படும் டெல்லிக்கு நேற்று மட்டும் 2 ஆயிரம் டன் வெங்காயம் வந்து சேர்ந்தது.

தொடக்கம்....

தொடக்கம்....

டெல்லி வெளிச்சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ. 80-120க்கு விற்கப்படும் நிலையில் அரசின் சார்பில் 125 வேன்களின் மூலம் நேற்று வெங்காய விற்பனை தொடங்கியது.

 500 பகுதிகளில்....

500 பகுதிகளில்....

டெல்லியின் 500 பகுதிகளை சுற்றி வந்த இந்த வேன்கள் ஒரு கிலோ வெங்காயத்தை 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+