வெடிகுண்டு மிரட்டல்... பாதுகாப்பு வளையத்தில் டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அந்த இடமே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. வெடிகுண்டு நிபுணர்களின் சோதனை மேற்கொண்டனர்.
நீதிமன்றத்துக்கு இன்று காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்மநபர் உயர் நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது விரைவில் வெடிக்கும் என்றும் தெரிவித்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.

இது குறித்து தகவலறிந்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் வெடிகுண்டு சோதனையில் வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு படையினர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக நடந்த சோதனையில் போலீஸார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. எனினும் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியாக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
சுதந்திர தினத்தன்றோ, அதை முன்னிட்டோ காஷ்மீரில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications