பேஸ்புக் நட்பு.. பலாத்காரம், கருக்கலைப்பு - அமைச்சர் மகனை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற டெல்லி போலீஸ்
ஜெய்பூர்: 23 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித்தை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி.
இவரது மகன் ரோகித் ஜோஷி தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி பலமுறை பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொண்டதாக டெல்லி காவல் துறையிடம் 23 வயது பெண் ஒருவர் புகாரளித்தார்.

பேஸ்புக் பழக்கம்
பேஸ்புக் மூலம் ரோகித் ஜோஷியுடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அவருடன் கடந்த ஓராண்டாக தொடர்ந்து பேசி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரோகித் ஜோஷியை முதன்முதலில் தான் சந்தித்தபோது ஒன்றாக மது அருந்தியதாக கூறியுள்ள அந்த பெண், அந்த இரவு தூங்கி காலை விழித்தபோது, ரோகித் ஜோஷி தன்னுடைய நிர்வாண படங்களையும் வீடியோக்களையும் காட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார்.

கருக்கலைப்பு
இதன் தொடர்ச்சியாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை பல முறை தன்னை மிரட்டி ரோகித் ஜோஷி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். 2021 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி தான் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததாக கூறியுள்ள பெண், இதனை அறிந்த ரோகித் ஜோஷி கருவை கலைக்க மாத்திரை சாப்பிட வற்புறுத்தியதாகவும் அதனை தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் விரைந்த டெல்லி போலீஸ்
இதுதொடர்பாக ராஜஸ்தான் அமைச்சரின் மகன் ரோகித் ஜோஷி மீது டெல்லி சாதர் பஜார் காவல் நிலைய போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். ஆளும் மாநில அமைச்சரின் மகனை கைது செய்ய வேண்டும் என்பதால் எந்த அசம்பாவீதங்களும் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்போடு 15 பேர் கொண்ட டெல்லி போலீஸ் குழு ராஜஸ்தான் வந்துள்ளது.

அமைச்சர் விளக்கம்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குற்றம்சாட்டப்பட்ட ரோகித் ஜோஷியின் தந்தையும், ராஜஸ்தான் அமைச்சருமான மகேஷ் ஜோஷி, "காவல்துறை அதன் பணியை செய்ய அனுமதிக்கிறேன். காவல்துறை நீதியை நிலைநாட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆழமாக சென்று உண்மை கண்டறியப்படும்." என்றார். ஆனால், அம்மாநில பாஜகவோ ரோகித் ஜோஷியை பாதுகாக்க ஆளும் காங்கிரஸ் அரசு முயல்வதாக குற்றம்சாட்டியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications