நொய்டாவில் டெல்லி போலீஸ் அதிகாரி தற்கொலை- 6வது மாடியில் இருந்து குதித்த மனைவி கவலைக்கிடம்!
நொய்டா: நொய்டாவில் டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற அவரது மனைவியும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லி ஸ்பெஷல் செல்லில் அசிஸ்டெண்ட் கமிஷனராக பணியாற்றி வந்த அமித் சிங், செக்டார் 100 பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவரது மனைவியும் அவரது வீடு அமைந்துள்ள 6வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
"அவரது மனைவி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டின் பயிற்சி கேடர் அதிகாரியான அமித் நொய்டாவில் தனது மனைவி மற்றும் 2 வயதான குழந்தையுடன் வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாலைமறியல் வன்முறை ஒன்றில் அவர் கடுமையாக தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்பகுதிக்கு விரைந்து சென்று அமித்தின் உடலையும், அவரது மனைவியையும் மீட்ட போலீசார் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications