டெல்லியில் 7 இடதுசாரி கட்சிகள் இணைந்தும் ஒரு இடத்திலும் ஆயிரம் ஓட்டு கூட வாங்கலையே!
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளை விட படுமோசமாக தோல்வியைத் தழுவியுள்ளனர் இடதுசாரிகள்.. அதுவும் 7 இடதுசாரி கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்த போதும் எந்த ஒரு தொகுதியிலும் ஆயிரம் ஓட்டு கூட வாங்காத பரிதாப நிலையை சந்தித்துள்ளனர் இடதுசாரிகள்.
டெல்லி சட்டசபை தேர்தலில் 67 இடங்களை ஆம் ஆத்மி கைப்பற்றியது. பாரதிய ஜனதா 3 இடங்களைத்தான் வென்றது. காங்கிரஸ் கட்சி முட்டை வாங்கியது.

இத் தேர்தலில் இடதுசாரிகள், மாயாவதியின் பகுஜன் சமாஜ், ஓம்பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக் தளம், சிவசேனா, இந்து மகாசபா ஆகியவையும் போட்டியிட்டும் டெபாசிட்டை முழுமையாக பறிகொடுத்தன.
இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இ. கம்யூ.- மா.லெ (விடுதலை), எஸ்.யூ.சி.ஐ.(சி), பார்வார்டு ப்ளாக், புரட்சிகர சோசலிஸ், சோசலிஸ்ட் கட்சி (இந்தியா) ஆகிய 7 இடதுசாரிகள் கட்சிகள் இணைந்து 15 தொகுதிகளில் போட்டியிட்டன. எஞ்சிய 55 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பதாகவும் அறிவித்தனர் இடதுசாரிகள்.
ஆனால் போட்டியிட்ட 15 தொகுதிகளில் ஒன்றில் கூட 1000 ஓட்டுகளைக் கூட இடதுசாரி வேட்பாளர்கள் வாங்கவில்லை. மிக அதிகபட்சமாக எஸ்.யூ.சி.ஐ. வேட்பாளர் ராகேஷ் குமார் என்ற வேட்பாளர் பட்லி தொகுதியில் 947 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் ரஞ்சித் திவாரி தாம் போட்டியிட்ட கரவால்நகரில் 712 ஓட்டுகளை வாங்கியிருக்கிறார். அப்துல் ஜப்பார் என்ற வேட்பாளர் 644, சஞ்சீவ் குமார் 542 ஓட்டுகளைப் பெற்றனர். எஞ்சிய இடதுசாரி வேட்பாளர் யாரும் 500 ஓட்டுகளைக் கூட பெறவில்லை.
மிகக் குறைவாக ஹரிசங்கர் சர்மா என்ற இடதுசாரி வேட்பாளர் 49, ராகேஷ் சர்மா 52 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
அந்தோ பரிதாபமே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications