கல்லூரி மாணவனை கொன்றுவிட்டு கடத்தியதாக நாடகம்.. டேட்டிங் இணையத்தால் டெல்லியில் நடந்த கொடூரம்
டெல்லியில் தனியார் கல்லூரியை சேர்ந்த ஆயுஷ் நாட்டியால் என்ற மாணவன் கொலை செய்யப்பட விவகாரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
டெல்லி: டெல்லியில் தனியார் கல்லூரியை சேர்ந்த ஆயுஷ் நாட்டியால் என்ற மாணவன் கொலை செய்யப்பட விவகாரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
கொலை செய்த இஸ்தியாஹ் அலி, ஆயுஷ் நாட்டியாலின் நண்பன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் நண்பர்கள் ஆகியுள்ளனர்.
ஆயுஷை கொலை செய்துவிட்டு இஸ்தியாஹ் அலி பெரிய கடத்தல் நாடகம் ஆடியுள்ளான். தற்போது போலீஸ் இவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேட்டிங் அப்ளிகேஷன்
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவன் ஆயுஷ் நாட்டியாலும், இஸ்தியாஹ் அலி என்ற இளைஞரும் டேட்டிங் அப்ளிகேஷன் ஒன்றின் மூலம் நண்பர்களாகி உள்ளனர். நிறைய பெண்களுடன் பழகுவதை விரும்பும் ஆயுஷ், அதே டேட்டிங் அப்ளிகேஷன் மூலம் இஸ்தியாஹ் அலியுடன் நண்பனாகி உள்ளார். இவர்கள் அடிக்கடி சந்தித்தும் இருக்கிறார்கள்.

மரணம்
இந்த நிலையில் நேற்று முதல் நாள் இஸ்தியாஹ் அலியை பார்க்க ஆயுஷ் சென்றுள்ளார். இஸ்தியாஹ் வீட்டில் இவர்கள் சந்தித்த போது, இருவருக்கும் எதோ ஒரு காரணத்திற்காக சண்டை வந்துள்ளது. இதில் இஸ்தியாஹ் அலி, ஆயுஷை தாக்கி கொலை செய்து இருக்கிறார். தலையில் இரும்பு கம்பியால் தாக்கி கொன்றுள்ளார்.

கடத்தல்
ஆனால் கொலை செய்த பின் ஆயுஷை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் ஆயுஷ் அம்மா, அப்பாவிற்கு அனுப்பி உள்ளார். மயக்கத்தில் இருப்பதாக சொல்லி, ''கடத்தி இருக்கிறேன், 50 லட்சம் பணம் வேண்டும்'' என்று கேட்டு இருக்கிறார். இந்த இடத்திற்கு பணம் கொண்டு வாருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் துப்பு துலக்கியது
இந்த நிலையில் பணம் கொடுக்க வேண்டிய இடத்தில் போலீஸ் மறைந்து இருந்துள்ளது. ஆனால் அங்கு இருந்த நீர்நிலை ஒன்றில் ஆயுஷ் உடல் மட்டுமே மிதந்துள்ளது. யாருமே அங்கு இருந்த பணத்தை எடுக்க வரவில்லை. ஆனால் கடைசியில் போலீஸ், மொபைல் சிக்னல் மூலம் டிராக் செய்து இஸ்தியாஹ் அலியை கண்டுபிடித்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications