டெல்லியில் இன்று “கார்கள் இல்லா தினம்”- சைக்கிள் பேரணியுடன் துவங்கி வைத்தார் கெஜ்ரிவால்!
டெல்லி: டெல்லியில் கார் இல்லாத தினத்தையொட்டி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்து அரசு பேருந்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த கார் இல்லாத தினத்தை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லியில் இன்று முதலாவது கார் இல்லாத தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இதனையொட்டி செங்கோட்டையில் இருந்து இந்தியா கேட் வரை நடைபெற்ற சைக்கிள் பேரணியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் துணை முதல்வர், அரசு அதிகாரிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பேரணியில் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களின் உபயோகத்தை பொதுமக்கள் குறைத்துக்கொள்ள அவர்கள் வலியுறுத்தினர். கார் இல்லாத தினத்தையொட்டி காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்கள் யாரும் கார்களை பயன்படுத்த வேண்டாம் என டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தசரா பண்டிகையை காரணம் காட்டி இன்று கார் இல்லாத தினத்தை கடைபிடிக்க டெல்லி காவல் துறை ஆட்சேபம் தெரிவித்தது. ஆனால், கெஜ்ரிவாலின் கோரிக்கையையடுத்து காவல் துறையினர் திட்டமிட்டபடி பேரணி நடத்த உத்தரவு பிறப்பித்தது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications