டெல்லி சட்டசபை தேர்தல்.. கெஜ்ரிவால் கட்சியால் மும்முனைப் போட்டி
டெல்லி: டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவால் கட்சியும் களமிறங்குவதால் மும்முனைப் போட்டி நிலவி வருகிறது.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு டிசம்பர் 4-ந் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இம்மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றை மிரட்டும் வகையில் 11 மாத கைக்குழந்தையான கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கியுள்ளது. இதனால் இரு கட்சிகளின் வாக்குகளும் கணிசமான அளவில் பிரிகிறது.

70 தொகுதிகள்...
டெல்லியில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 58 பொதுத் தொகுதிகள்.. தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதிகள் 12.

செல்வாக்கான காங்கிரஸ்
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40.31% வாக்குகளைப் பெற்றிருந்தது. அதாவது 70 தொகுதிகளில் 43 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது.

துரத்தும் பாஜக
பாரதிய ஜனதா கட்சி 69 தொகுதிகளில் போட்டியிட்டு 23 இடங்களைக் கைப்பற்றியது. அதன் வாக்கு சதவீதம் 36.84%.

மல்லுகட்டும் பகுஜன்
இந்த மாநிலத்திலும் பகுஜன் சமாஜ் 70 தொகுதியில் போட்டியிட்டு 2 இடங்களைக் கைப்பற்றியது பகுஜன்.

மண்ணைக் கவ்விய இடதுசாரிகள்
டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனைத்திலுமே டெபாசிட்டை இழந்தன.

என்.சிபி, ஆர்ஜேடி
டெல்லி சட்டசபை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 16- தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை தழுவியது. இதில் 14-ல் டெபாசிட் இழந்தது. அதேபோல் ராஷ்டிரிய ஜனதா தளம் 11 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. இதில் 10-ல் டெபாசிட்டை பறிகொடுத்தது.

ஆம் ஆத்மி
தற்போதைய தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு கிலி ஏற்படுத்தக் கூடிய கட்சியாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் இம்மாநிலத்தில் வலுவான மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது. பெரும்பாலான தேர்தல் கருத்துக் கணிப்புகளில் பாஜகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றாலும் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு அதிகரித்து கணிசமான இடங்களைக் கைப்பற்றும் என்றே சொல்லப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications