இந்த ஆண்டிலேயே இன்று தான் டெல்லியில் கடுங்குளிர்: நடுங்கும் மக்கள்
டெல்லி: டெல்லியில் இந்த ஆண்டில் இன்று காலை தான் கடுங்குளிராக இருந்தது. இன்று காலை குறைந்தபட்ச வெட்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக இருந்தது.
டெல்லியில் கடுங்குளிரும், பனிமூட்டமுமாக உள்ளது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டிலேயே இன்று காலை தான் டெல்லியில் அதிகம் குளிராக இருந்துள்ளது. இன்று காலை டெல்லியின் குறைந்தபட்ச வெட்பநிலை 4.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

மேலும் இன்று காலை கடும் பனிமூட்டமாகவும் இருந்தது. இதனால் இன்று டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, 14 ரயில்கள் புறப்படும் நேரம் தள்ளி வைக்கப்பட்டது என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
இன்று தான் டெல்லியில் மிகவும் குளிராக இருந்தது. கடும் பனிமூட்டத்தால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியவில்லை. இன்னும் சில நாட்களுக்கு இப்படித் தான் இருக்கும் என்றார்.
இன்று டெல்லியில் வானம் தெளிவாக இருந்தாலும் அதிகபட்ச வெட்பநிலை 18 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications