தமிழகத்தை வஞ்சிப்பது ஏன்?: டெல்லி வாழ் தமிழர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டம்
தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் என்று கேட்டு டெல்லி வாழ் தமிழர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

டெல்லி: தமிழகத்தை வஞ்சிப்பது ஏன் என்று கேட்டு டெல்லி வாழ் தமிழர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்துள்ளது. அரசியல் கட்சிகளு்ம, விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தமிழகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. காவிரி வாரியம் அமைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

டெல்லி வாழ் தமிழர்கள் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று டெல்லி வாழ் தமிழர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றம் அமைந்துள்ள சாலையில் ராஜீவ் சவுக் கேட் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக முழக்கம்
நாம் தமிழ் தில்லி என்ற தமிழ் அமைப்பினர் ஒருங்கிணைந்த இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடுக என்ற கோஷம் விண்ணை பிளந்தன. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

குழந்தைகள் ஏந்திய பதாகைகள்
இந்த போராட்டத்தின்போது குழந்தைள்,இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதில் தமிழகத்தை வஞ்சிப்பது ஏன், விளையாட்டா , விவசாயமா, விவசாயிகளை தற்கொலையிலிருந்து காப்பாற்று, நீர் இல்லையேல் உழவு இல்லை, உழவு இல்லையேல் உணவு இல்லை ஆகிய பதாகைகள் ஏந்தப்பட்டன.

நாம் தமிழ் அமைப்பினர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராட்டத்தை ஒருங்கிணைத்த நாம் தமிழ் அமைப்பினர் நாடாளுமன்ற சாலையில் பேரணியும் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னஞ்சிறு குழந்தை ஒன்றின் தலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக என்று பேப்பரில் எழுதி ஒட்டிருந்தனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications