சக விவசாயிகள், கெஞ்சல், கதறல்.. மனமிறங்கி தற்கொலை முடிவை கைவிட்டு மரத்திலிருந்து இறங்கிய இளைஞர்கள்
அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி: மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் இருவரையும் பார்த்து .சக விவசாயிகள் கெஞ்சியதால் அவர்கள் தற்கொலை முடிவை கைவிட்டனர்.
விவசாயிகள் பிரச்சினைக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ரமேஷ் மற்றும் அகிலன் ஆகியோர் இன்று மதியம் திடீரென மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர்.

அப்போது அங்கு நடிகர் விஷால், இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோரும் உடனிருந்தனர். விஷால், கையெடுத்து கும்பிட்டு இளைஞர்களை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டார். பிற சக விவசாயிகளும் கெஞ்சி கேட்டனர். போராட்டத்தின் திசை மாறிவிடும், போராட்ட களத்திலிருந்து போலீசார் விரட்டிவிடுவார்கள் என கூறி அவர்கள் கெஞ்சினர்.
சுமார் 10 நிமிட நேரம் கெஞ்சிய பிறகு இரு இளைஞர்களும் கீழே இறங்கினர். அப்போதுதான் தீயணைப்பு துறை வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அவர்களை திருப்பியனுப்பினர் விவசாயிகள். முன்னதாக கீழே விழுந்துவிட்டால் அடிபட்டுவிடக்கூடாது என்பதற்காக சாக்குப் பையை கீழே பிடித்து வைத்திருந்தனர் சக விவசாயிகள்.
அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே இறங்கிய இளைஞர்களை விஷாலும் பிறரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications