For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தேறுவது கடினமே: சொல்கிறது சி.என்.என்.- ஐபிஎன் சர்வே

By Mathi
|

டெல்லி: லோக்சபா தேர்தலில் டெல்லியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்தான் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சி.என்.என்.-ஐ.பி.என். கருத்து கணிப்பு.

லோக்சபா தேர்தலையொட்டி பல மாநிலங்களில் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கருத்து கணிப்பை கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது சி.என்.என்.-ஐ.பி.என்.

தமிழகத்தில் அதிமுக, ஆந்திராவில் தெலுங்குதேசம், கர்நாடகாவில் பாரதிய ஜனதா, ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என பல மாநில கட்சிகளே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு.

டெல்லியைப் பொறுத்தவரையில் அனைத்து இடங்களையும் பாஜகவே கைப்பற்றும் என்று சொன்னது இந்தியா டுடே கருத்து கணிப்பு. ஆனால் சி.என்.என்.-ஐ.பி.என். கருத்து கணிப்போ அதிகபட்சம் 4 இடங்களை பாஜக கைப்பற்றும் என்கிறது.

பாஜகவுக்கு 3-4

பாஜகவுக்கு 3-4

டெல்லியில் மொத்தம் உள்ள 7 லோக்சபா தொகுதிகளில் பாஜக 3 அல்லது 4 தொகுதிகளைத்தான் கைப்பற்றுமாம்.

ஆம் ஆத்மிக்கு 2-3

ஆம் ஆத்மிக்கு 2-3

ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் 2 அல்லது 3 தொகுதிகளைக் கைப்பற்றுமாம்..

காங்கிரஸுக்கு?

காங்கிரஸுக்கு?

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கலாம் என்கிறது இக்கருத்து கணிப்பு.

இஸ்லாமியர்கள் வாக்கு?

இஸ்லாமியர்கள் வாக்கு?

டெல்லியில் இஸ்லாமியர்களில் 56% பேர் காங்கிரஸையும் தலித்துகளில் 33% பேர் பாஜகவையும் ஆதரிக்கிறார்களாம்.

ஆம் ஆத்மி அரசு?

ஆம் ஆத்மி அரசு?

டெல்லியில் குறுகிய காலம் ஆட்சி நடத்திய ஆம் ஆத்மி அரசின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக 68% பேர் கூறியுள்ளனர்.

பிரதமராக மோடிக்கு 38%

பிரதமராக மோடிக்கு 38%

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடிக்கு 38% பேரும் கேஜ்ரிவாலுக்கு 20% பேரும் ராகுலுக்கு 10% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

English summary
The BJP seems to have made big gains and the AAP seems to have lost ground in Delhi. According to CNN-IBN-Lokniti-CSDS national election tracker and seat projections by Chennai Mathematical Institute Director Rajeeva Karandikar, the BJP is expected to win 3-4 seats, AAP 2-3 and Congress 0-1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X