குட்டைப் பாவாடை மாதிரி இருக்க வேண்டுமாம் இமெயில்.. டெல்லி பல்கலை.யின் சர்ச்சைப் பாடம்!

இ-மெயில் செய்தியானது குட்டை பாவாடை போல் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இ-மெயில் செய்தியானது அரை பாவாடை போல் குட்டையாகவும், முக்கிய பகுதிகளை மறைத்து உள்ளடக்கும் அளவுக்கு நீளமானதாகவும் இருக்க வேண்டும் என்று டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள கல்லூரிகளில் பி.காம் (ஹானர்ஸ்) பட்டபடிப்பில் 'பேசிக் பிசினஸ் கம்யூனிகேஷன்'( அடிப்படை வர்த்தக தகவல் தொடர்பு) என்ற புத்தகம் பல ஆண்டுகளாக பாடத்திட்டத்தில் உள்ளது.

Delhi University syllabus includes sexist content!

இதை எழுதியவர் டெல்லி கல்லூரி ஒன்றின் வணிகத் துறை முன்னாள் துறைத் தலைவர் சி.பி.குப்தா. இந்த பாடத்திட்டத்தில் இ-மெயில் எப்படி எழுத வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இஇ-மெயில் அரை பாவடை அளவுக்கு சிறியதாகவும், முக்கிய பகுதிகளை உள்ளடக்கும் அளவுக்கு நீளமாகவும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது இரட்டை அர்த்தத்தை ஏற்படுத்துவதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இரட்டை அர்த்தம் உள்ள இந்த விளக்கத்தை படித்த ஒரு மாணவி இந்த புத்தகத்தை எழுதியவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக இதுபற்றி யாரும் கேள்வி எழுப்பாது அந்த மாணவிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இரட்டை அர்த்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியதும், இதை எழுதிய சி.பி.குப்தா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாக்கியத்தை தான் சொந்தமாக எழுதவில்லை என்றும் வெளிநாட்டு புத்தகம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.

இனிமேல் அச்சடிக்கப்படும் புத்தகங்களில் இந்த வாக்கியங்கள் நீக்கப்படும் என்றும் குப்தா உறுதியளித்துள்ளார். பிளஸ் 2 உடற்கல்வி பாடப் புத்தகம் ஒன்றில், பெண்களின் உடலமைப்பு 36-24-36 இன்ச் அளவில் இருந்தால் அது சிறப்பான உடலமைப்பு என இடம்பெற்றிருந்த தகவல் சமூக இணையதளங்களில் சமீபத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+