என்னை விட்டு ஓடிப் போக முடியுமா... 'தப்பி ஓடிய' கெஜ்ரிவாலை இழுத்துப் பிடித்து அணைத்து ஆதரித்த டெல்லி
டெல்லி: கெஜ்ரிவாலையும், டெல்லியையைும் பார்க்கும்போது ஊடல் கொண்ட காதலர்கள் போலத்தான் தோன்றுகிறது. கோபம் கொண்டு பாதியிலேயே கிளம்பிப் போன காதலனை, பரிசு கொடுத்து காதலி சமாதானப்படுத்தி, சந்தோஷப்படுத்தியது போலத்தான் இருக்கிறது இந்தத் தேர்தல் முடிவும்.
அன்னா ஹஸாரேவுடன் இணைந்து கெஜ்ரிவால் செயல்பட்டபோது நாடு முழுமையும் இந்தக் கூட்டணி பெரும் அலையை எழுப்பியது. ஆர்ப்பரிப்புடன் அவர்கள் மக்களைத் தட்டி எழுப்பினார்கள். பெரிய பெரிய அரசியல் கட்சிகள் எல்லாம் தட்டுத் தடுமாறின, பயந்தன, பீதி அடைந்தன. ஆனால் அந்தப் போராட்டம் திடீரென பெரும் சரிவைச் சந்தித்தது.

கெஜ்ரிவால் அன்னா குழுவிலிருந்து விலகியது இதற்கு முக்கியக் காரணம். ஆனால் அதை அப்போது பெரும்பாலானவர்கள் உணரவில்லை. கிரண் பேடி போன்றோரால் அந்த இயக்கத்தை தொடர்ந்து தாங்கிப் பிடிக்க முடியவில்லை. கெஜ்ரிவால் அன்னா குழுவிடமிருந்து விலகி, உடனடியாக ஆம் ஆத்மி என்ற கட்சியைத் தொடங்கியபோது பலரும் அவரை கிண்டலடித்தார்கள். இவரும் சராசரி அரசியல்வாதியாகி விட்டார் என்பதே விமர்சனமாக இருந்து.
ஆனால் 2013 சட்டசபைத் தேர்தலில் வரலாறு படைத்தார் கெஜ்ரிவால். பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நடுவே புகுந்து நாறடித்து விட்டார்கள் ஆம் ஆத்மியினர். பாஜகவால் பெரும்பான்மை பலத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட கெஜ்ரிவாலே காரணம், காங்கிரஸ் கரைந்து காணாமல் போக கெஜ்ரிவாலே காரணம். வழக்கமாக முதலாவது இடத்தைப் பிடிக்கும் கட்சிக்கு, 2வது இடத்தைப் பிடிக்கும் கட்சியிலிருந்து சில எம்.எல்.ஏக்கள் தாவி் வந்து கட்சியை உடைத்து வந்து ஆதரவு கொடுத்து ஆட்சியமைப்பதே இந்தியாவின் வரலாறாக இருந்து வந்தது. அந்த வரலாற்றை ஆம் ஆத்மி அன்று உடைத்தது.
கட்சி கட்டுக் கோப்பாக இருந்தது. பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை. 3வது இடத்தைப் பிடித்த காங்கிரஸ் தானாக முன்வந்து ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுத்தது. ஆம் ஆத்மி ஆட்சியமைத்தது. ஆனால் கெஜ்ரிவால் எல்லாவற்றிலும் அவசரப்பட்டார். உடனடியாக எல்லாம் மாற வேண்டும் என்று ரமணா விஜயகாந்த் போல ஆசைப்பட்டார். மாறாததை நினைத்து வருத்தப்பட்டார், கோபப்பட்டார். அது எதிர்மறையாக மாறியது.
டெல்லி போலீஸ் துறையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள மத்திய அரசும் கெஜ்ரிவாலை சோதித்துப் பார்த்தது. அதில் ஏமாந்த கெஜ்ரிவால் போராட்டத்தில் குதித்து மக்களிடம் அதிருப்தியைச் சம்பாதித்தார். கடைசியில் பதவியை உதறி விட்டுப் போய் விட்டார். ஆட்சியும் பறி போனது.
ஆனால் இப்போது மக்கள் ஆம் ஆத்மிக்கு அளித்துள்ள அமோகமான ஆதரவைப் பார்க்கும்போது நீங்க என்னதான் பாலிட்டிக்ஸ் செய்தாலும் ஆம் ஆத்மிக்கே எங்களது ஆதரவு, எங்களது மாற்றத்திற்கான தாகம் இன்னும் தணியவில்லை என்று பாஜக மற்றும் காங்கிரஸுக்கு மக்கள் உணர்த்தியுள்ளதாகவே தெரிகிறது.
அதை விட முக்கியமானது, சாமானிய மக்களுக்காக உழைக்கும் சக்திகளுக்கு அந்த மக்களின் ஆதரவு உறுதியாக இருக்கும் என்பதையும் இந்த முறை டெல்லி வாக்காளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர். தாங்கள் எதிர்பார்க்கும் நல்ல தலைமை பாஜக, காங்கிரஸில் இல்லை என்பதையும் அவர்கள் வெளிப்படையாகவே சொல்லி விட்டனர்.
மேலும் மோடி அரசு மீதான தங்களது அதிருப்தியையும் மக்கள் காட்டியிருப்பதாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. சாதாரண வெற்றியாக இருந்தால் கூட பரவாயில்லை, பாஜகவை சிங்கிள் டிஜிட்டுக்கு மக்கள் ஓட விட்டுள்ளனர். காங்கிரஸை துரத்தியடித்துள்ளனர். டெல்லியே பாஜகவுக்கு எதிராக பேயாட்டம் போட்டிருக்கிறது. கிட்டத்தட்ட "மோடி ஸ்டைலில்" டெல்லியைக் கைப்பற்றியிருக்கிறார் கெஜ்ரிவால்.
அவர் என்னதான் கோபப்பட்டு பாதியில் ஆட்சியை விட்டுப் போனாலும் கூட அது பற்றிக் கவலைப்படாமல், அவரைப் போல அவசரப்படாமல் நிறுத்தி நிதானித்து நீதான் எங்கள் தலைவன், நீதான் வேண்டும் என்று மனப்பூர்வமாக அழைத்துள்ளனர் டெல்லி மக்கள். நிச்சயம் இந்த முறை கெஜ்ரிவால் தப்பே செய்ய மாட்டார், முன்பை விட அதி வேகமாக, அதி புத்திசாலித்தனமாக, அதீத உற்சாகத்துடன் மக்கள் பலத்துடன் டெல்லியை மாற்றியமைக்க முயல்வார் என்று நம்பலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications