தாமதமாக டெலிவரி செய்த ப்ளிப்கார்ட்.. கூரியர் பையனை 20 முறை கத்தியால் குத்திய டெல்லி பெண்!
டெல்லி: ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய அதிக நாள் எடுத்ததால், டெலிவரி பாயை பெண் ஒருவர் கத்தியால் குத்தி இருக்கிறார்.
டெல்லியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூரமான செயலை செய்த கமால் தீப் என்ற 32 வயது நிரம்பிய டெல்லி பட்டதாரி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேசவ் என்ற ப்ளிப்கார்ட்டில் வேலை செய்யும் டெலிவரி பாய் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் மோசமான திருட்டு சம்பவம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது.

11 ஆயிரம் ரூபாய் போன்
கமால் தீப் என்ற அந்த பெண் 11 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்து இருக்கிறார். ஆனால் ஆர்டரை டெலிவரி செய்ய வேண்டிய கேசவ் டெல்லிக்கு புதியவர் என்பதால் ஒருநாள் தாமதமாக டெலிவரி கொடுக்க சென்றுள்ளார். ஆனால் அதற்குள் அந்த பெண் கேசவை பலமுறை போன் செய்து திட்டியுள்ளார்.

கத்தியால் குத்தினார்கள்
இந்த நிலையில் கடந்த வாரம் கேசவ் அந்த பெண்ணின் வீட்டிற்கு டெலிவரி கொடுக்க சென்ற போது, அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். கமால் தீப்பும் அவரது தம்பியும் சேர்ந்து கேசவை கத்தியால் 20 முறை குத்தியுள்ளனர். ஆனால் கேசவ் அவர்களிடம் இருந்து தப்பித்து தெருவிற்கு ஓடி தப்பித்துள்ளார். தற்போது இவர் மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

திருட்டு
தாமதமாக டெலிவரி கொடுக்க வந்த கோபம் மட்டுமில்லாமல் கமால் தீப் திருடவும் செய்துள்ளார். டெலிவரி செய்ய வந்த கேசவ் பாதியில் ஓடியதை அடுத்து எல்லா பணம், பொருள்களையும் எடுத்து வீட்டிற்குள் மறைத்துள்ளார். 40,000 ரூபாய் பணம், 1 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர் திருடியதாக கூறப்படுகிறது.

மாட்டினார்கள்
ஒருவாரமாக யார் கேசவை குத்தியது என தெரியாமல் போலீஸ் திணறி வந்தது. இந்த நிலையில் தற்போது கேசவ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கமால் தீப்பும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டு சிசிடிவியில், கத்தியால் குத்திய சம்பவம் பதிவாகி உள்ளது. கேசவ் விரைவில் குணமடைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications