ம.பி: பாஜக ஆட்டைய போட்ட 'ஆட்சியை' மீண்டும் கைப்பற்றுதாம் காங்கிரஸ்- எக்ஸிட் போல் சொல்வது என்ன?
போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக பறித்துக் கொண்ட ஆட்சியை காங்கிரஸ் கட்சி மீண்டும் கைப்பற்றும் என்கிறது Democracy Times எக்ஸிட் போல் முடிவுகள்.
மத்திய பிரதேசத்தில் 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. பாஜக 109 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும் வென்றன. மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகள். பெரும்பான்மைக்கு தேவை 116 இடங்கள். மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.

ஆனால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு கவிழ்த்தது பாஜக. இதனையடுத்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியை பாஜக திடுவிட்டது என குற்றம் சாட்டி இருந்தார்.
மத்திய பிரதேசத்தில் பாஜகவும் காங்கிரஸும் சரமாரியாக தேர்தல் வாக்குறுதிகளை வாரி வீசின. இலவசங்களை கடுமையாக விமர்சிக்கும் பாஜக, திராவிட கட்சிகள்- காங்கிரஸ் பாணியில் வாக்குறுதிகளை வாரி வழங்கியது.

மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்தது. மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள், பாஜக ஆட்சியை பறிகொடுக்கும் என்றே தெரிவித்தன. தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பலவும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையலாம் என தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என Democracy Times Network வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகள்:
காங்கிரஸ் 106 முதல் 122 இடங்கள்
பாஜக 103 முதல் 119 இடங்கள்
இதர கட்சிகள் 1 முதல் 6 இடங்கள்
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications