மோடியின் பண அறிவிப்பால் நாட்டுக்கு ஒரு நல்லதும் நடக்கவில்லை: ராகுல் காந்தி
டெல்லி: பணம் குறித்த மோடியின் அறிவிப்பால் ஒரு நன்மையும் நாட்டுக்கு கிடைக்கவில்லை என காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் மம்தா பானர்ஜியுடன் இணைந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மேலும் கூறியதாவது: பண மதிப்பிழப்பு அறிவிப்பு ஊழலை குறைக்கவில்லை. ஆனால் மக்களை பணமில்லாமல் ஓடத்தான் வைத்துள்ளது.

மத்திய அரசின் முழு தோல்வியையே இது காண்பிக்கிறது. இந்த பேரழிவுக்கு மோடி பதில் சொல்லியே தீர வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது குறித்தும் மோடி பதில் சொல்ல வேண்டும்.
ஊழல் பற்றி மோடி வாய் திறக்கவே மறுத்து வருகிறார். அவர் மீதான சகாஹா டைரி கூறும் ஊழல் பற்றி கூட வாய் திறக்கவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
பண மதிப்பிழப்பு குறித்து பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ள நாளையுடன் 50 நாட்கள் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications