நீங்க ரூ 2.5 லட்சத்துக்கு மேல டெபாசிட் செஞ்சீங்களா? வருது... வருது ஐடி நோட்டீஸ்
வங்கிகளில் 2.5 லட்ச ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துரை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டெல்லி: செல்லாத ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ரூ.2.5 லட்சத்துக்கும் அதிகமாக வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரி துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வருகின்றனர். டெபாசிட் செய்வதற்கு உச்ச வரம்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ரூ 2.5 லட்டத்திற்கு மேல் டெபாசிட் செய்வர்கள் கட்டாயம் பான் எண், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வங்கியில் சமர்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் இரண்டரை லட்சம் ரூபாயைத் தாண்டி யாரெல்லாம் டெபாசிட் செய்கிறார்களோ அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயரில் 2.5லட்சம் ரூபாய்க்கு மேல் 10ம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கு வருமான வரி சட்டம் 133(6) பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வசிக்கும் ஏராளமானோருக்கு இந்த நோட்டீசுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்த நோட்டீசில் எந்த தேதியில் எவ்வளவு பழைய ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டது, அதற்கான ஆதார ஆவணங்கள், புத்தக கணக்குகள் ஆகியவை குறித்தும் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications