ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கவில்லையாம்.. சொல்கிறார் உலக வங்கி சிஇஓ
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரரி கிருஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று உலக வங்கியின் தலைமைச் செயல் அதிகாரரி கிருஸ்டாலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதாக கூறி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி 500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து பழைய 500 ரூபாய் மற்றும் 1000ரூபாய் நோட்டுக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 31 ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்களின் வங்கி கணக்கில் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது .

இதனைத்தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்து புழக்கத்தில் விட்டது. இந்த நடவடிக்கையால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.
இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கபட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்ச்சித்து வருகிறது. ஆனால் இந்திய அரசு செயல்படுத்தியிருக்கும் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, எதிர்பார்த்த பலனை தர போவதாக உலக வங்கியின் தலைமைச் செயலர் அதிகாரி கிருஸ்டாலினா ஜார்ஜியாவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
இந்தியாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பிற நாடுகள் படித்து தெரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்த நடவடிக்கையால் கருப்பு பணப் புழக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்தியா மாறியுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், பண தட்டுப்பாடு நிலவியது, ஆனால் இதற்கு இந்திய மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். மேலும் புதிய நோட்டுகள் புழக்கத்தில் வரும் வரை மக்கள் பொறுமையாக இருந்த மக்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
குறுகிய கால அளவில் பார்க்கும்போது, பணமதிப்பிழப்பு செய்தது அவசியமற்றதாக இருக்கலாம், ஆனால் நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியை அடைய இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவும். இதனால் இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பையும் அடையவில்லை .
இவ்வாறு கிறிஸ்டலினா ஜார்ஜியாவா கூறினார். .
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications