பழைய நோட்டை மாற்ற புது புது சட்டதிட்டம்.. எவ்வளவு எடுக்கலாம்.. எவ்வளவு எடுக்க முடியாது
பழைய நோட்டை மாற்றுவது தொடர்பாக புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துக் கொண்டே இருக்கிறது. திருமணச் செலவுகளுக்காக எவ்வளவு எடுக்கலாம், விவசாயிகள் எவ்வளவு எடுக்கலாம் என்பன உள்ளிட்ட 7 புதிய அறிவிப்புகளை நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

- இன்று முதல் 2000 ரூபாய் வரை மட்டுமே பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும்.
- டிசம்பர் 30ம் தேதி வரை ஒரு நபர் ஒரு முறை மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும்.
- வங்கிகளில் இருந்து பயிர்க்கடன் வாங்கிய விவசாயிகள் அல்லது விவசாயக் கடன் அட்டை வைத்திருப்போர் ஒரு வாரத்துக்கு 25 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம்.
- விவசாயிகளில் ஆர்டிஜிஎஸ் எனப்படும் மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் பணம் பெற்று வருபவர்களும், காசோலைகளை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களும், கூடுதலாக 25 ஆயிரம் ரூபாய் வங்கிகளில் இருந்து பெறலாம்.
- 25 ஆயிரம் பணம் எடுக்கும் விவசாயிகள் கண்டிப்பாக பான் எண்ணை குறிப்பிட வேண்டும்.
- அதே போன்று ஒரு கணக்கில் இருந்து மட்டுமே பணம் எடுக்கப்படுகிறது என்ற உறுதிமொழியை விவசாயிகள் அளிக்க வேண்டும்.
- விவசாயிகள் பயிர்க்கடன் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகையை செலுத்துவதற்கான கால அவகாசம் 15 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வேளாண் சந்தை வர்த்தகர்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய கூலி உள்ளிட்ட பல்வேறு விதமான செலவுகளுக்காக ஒரு வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை வங்கிகளில் இருந்து எடுக்கலாம்.
- திருமணச் செலவுகளுக்காக மணமகன் அல்லது மணமகளின் தந்தையோ தாயோ வங்கிகளில் இருந்து 2.5 லட்சம் பணம் எடுக்கலாம்.
- திருமணச் செலவுக்காக பணம் எடுக்கப்படும் போது பான் எண் அவசியம் குறிப்பிட வேண்டும்.
- திருமணத் தேவைக்காக மட்டுமே எடுக்கப்படுகிறது என்ற சுய உறுதிமொழியையும் எழுத்து மூலம் அளிக்க வேண்டும்.
- குரூப்-சி வரையிலான அரசு ஊழியர்கள் சம்பள முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்.
- வங்கிகளில் நடப்புக் கணக்கு வைத்துள்ள வணிகர்கள் வாரத்துக்கு ரூ.50 ஆயிரம் வரை எடுக்கலாம்.
- வங்கி முகவர்கள் ஒரு நாளில் ரூ.50 ஆயிரம் வரை பல தடவைகளில் பணம் எடுக்க எடுக்கலாம்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications