திருமண வீட்டில் பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் மணமகனின் தந்தை கொலை
ஹரித்வார்: உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் தனக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் வாலிபர் ஒருவர் மணமகனின் தந்தையை சுட்டுக் கொலை செய்துள்ளார்.
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள சகோதி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண வீட்டில் பாலிவுட் பாடல்களுக்கு விருந்தினர் நடனம் ஆடினர். அப்போது மணமகனின் தந்தை விஷ்வாஸ் ராம் வந்து பாடல் ஒலிபரப்பை நிறுத்துங்கள் திருமண சடங்குகளை துவங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு குடிபோதையில் இருந்த தெலுராம் தலைமையிலான வாலிபர்கள் விஷ்வாஸிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். தங்களுக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டும் என்றும், அதற்கு தாங்கள் நடனம் ஆட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து லிஷ்வாஸுக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விஷ்வாஸை சுட்டார். இதில் படுகாயம் அடைந்த விஷ்வாஸை உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தினர் தெலுராம், மதன்பால் மற்றும் சுமித் சிங் ஆகியோரை அடித்து நொறுக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிராமத்தினர் தாக்கியதில் காயம் அடைந்த மதன்பால் மற்றும் சுமித் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications