அந்தோ பரிதாபம்.. மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் தோல்வியை தழுவிய பாஜக!
குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவியிருக்கிறது.
Recommended Video

அகமதாபாத்: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்த இடங்களில் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவியிருக்கிறது. 4 முறை, 5 முறை எம்.எல்.ஏவாக இருந்த பாஜக தலைவர்களும் தோல்வியைத் தழுவியவர்களில் அடக்கம்.
குஜராத் சட்டசபை தேர்தலில் முழு வீச்சில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். ஒருநாட்டின் பிரதமர் என்ற பதவியில் இருந்த போதும் கூட குஜராத் தேர்தலை சொந்த பிரச்சனையாகவே பார்த்தார் மோடி.
குஜராத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி அனல் பறக்கும் பிரசாரங்களை மேற்கொண்டார். ஆனால் பிரதமர் மோடி பிரசாரம் செய்த பகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது என்கிறது அகமதாபாத் மிர்ரர் ஊடகம்.

மோடி பிரசாரம்
இது தொடர்பாக அகமதாபாத் மிர்ரர் ஊடகம் எழுதியுள்ளதாவது: அமைச்சர்களாக இருந்த சங்கர் சவுத்ரி, ஜாஷா பரத் ஆகியோர் வாவ் மற்றும் சோம்நாத் தொகுதிகளில் தோற்றுப் போனார்கள். இந்த தொகுதிகளில் பிரதமர் மோடி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார்.

30 இடங்களில் பிரசாரம்
மத்திய குஜராத்தில் லுனாவாடாவில் சுயேச்சை வேட்பாளர் ரதன்சின் ரதோடு, பாஜகவின் மனோஜ் படேலைத் தோற்கடித்தார். இங்கும் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் நடத்தியிருந்தார். நவம்பர் மாதம் கடைசிவாரத்தில் 5 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக 30 பிரசார கூட்டங்களை பிரதமர் மோடி நடத்தினார்.

மோடிக்கு பதில்
ஆனாலும் இந்த பிரசாரம் கை கொடுக்கவில்லை. ஆனந்த் தொகுதியில் யோகேஷ் படேலுக்கு பிரதமர் மோடி வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மக்கள் இதனை நிராகரித்தனர்.

6 முறை எம்.எல்.ஏ. அவுட்
பிரதமர் மோடி நவம்பர் 27-ந் தேதி பிரசாரம் செய்த தாரியில் பாஜக மூத்த தலைவர் திலீப் சங்கானி தோற்றுப் போனார். பிரதமர் மோடி பிரசாரம் செய்த ஜூனாகத்தில் 5-ல் 4 இடங்களில் தோற்றுப் போனது. இதில் 6 முறை எம்.எல்.ஏவாக இருந்த மகேந்திர மஸ்ருவும் அடக்கம். நவம்பர் மாத கடைசியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த மோர்பியில் 5 முறை எம்.எல்.ஏவாக இருந்த பாஜகவின் அம்ருதியா தோற்றுப் போனார். இப்படி பிரதமர் மோடி பிரசாரம் செய்த தொகுதிகளில் பாஜக தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
-
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு












Click it and Unblock the Notifications