பலதார மணங்களுக்கு தடை.. உத்தராகண்ட் பொது சிவில் சட்ட மசோதா உருவானது எப்படி? முக்கிய அம்சங்கள் என்ன?
டேராடூன்: உத்தராகண்ட் மாநில சட்டசபையில் இன்று பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், அந்த மசோதாவில் இடம்பெற்று இருக்கும் அம்சங்கள் என்ன என்று விரிவாக பார்ப்போம்.
நாடு முழுவதும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான முயற்சியில் மத்திய பாஜக அரசு மக்களிடம் கருத்து கேட்டு இருக்கும் நிலையில், இதற்கு முன்பாக உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி அதை கொண்டு வரும் முயற்சியை தொடங்கினார். இது தொடர்பான சட்ட முன்வடிவை உருவாக்குவதற்காக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு பொது சிவில் சட்ட வரைவை தயாரித்து அரசிடம் வழங்கியது. இதற்கு அம்மாநில அமைச்சரவை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் 4 நாள் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தொடரை திங்கட் கிழமை கூட்டினார் அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி. இந்த நிலையில் இன்று உத்தராகண்ட் சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆளுநரின் ஒப்புதலுக்காக இது அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பின்னர் இது சட்டமாகிவிடும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில தேர்தல் அறிக்கையில் பாஜக குறிப்பிட்ட முக்கிய வாக்குறிதியாக இது இருந்தது. இதனை தற்போது நிறைவேற்றும் வகையில் மசோதாவை தாக்கல் செய்கிறது அம்மாநில அரசு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குற்றவியல் சட்டங்கள், தண்டனை சட்டங்கள் போன்றவை சமமாக உள்ள நிலையில் தனி நபர் சார்ந்த சிவில் சட்டங்கள் மட்டும் வெற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்கள், பார்சிக்கள் என பல்வேறு மதத்தினருக்கு தனித்தனியாக உள்ளது. இதனை ஒரே சட்டமாக்குவதுதான் பொதுசிவில் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.
பொது சிவில் சட்டம் என்றால் என்ன?
திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, பரம்பரை மற்றும் வாரிசு உள்ளிட்ட தனிப்பட்ட சிவில் விஷயங்கள் தொடர்பான சட்டங்கள் மதங்களுக்கு ஏற்ப தனிச்சட்டங்கள் உள்ள நிலையில், அவற்றை ஒழித்துவிட்டு மத அடிப்படையில் அல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டங்களை உள்ளடக்கியது தான் பொது சிவில் சட்டம்.
உத்தராகண்ட் பொது சிவில் சட்டம் சொல்வது என்ன?
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோலி, சமூக செயற்பாட்டாளர் மனு கவுர், முன்னாள் உத்தராகண்ட் தலைமைச் செயலாளர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரேகா தங்க்வால் உள்ளிட்டோர் இடம்பெற்று உள்ளனர். இந்த குழு 740 பக்கங்கள் 4 பகுதிளை கொண்ட பொது சிவில் சட்ட வரைவை உருவாக்கி இருக்கிறது. இது குழு லட்சக்கணக்கான மக்களிடம் ஆன்லைன் மூலமாக கருத்துக்களை பெற்றதாகவும், 43 கூட்டங்களை கூட்டி 60 ஆயிரம் மக்களிடம் இது தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்து உள்ளது.
பொதுமக்களின் உரையாடல்கள், விவாதங்கள், பரிந்துரையின்படியே இந்த பொது சிவில் சட்டம் உருவானதாக அம்மாநில முதலமைச்சர் தாமி கூறி இருக்கிறார். இந்த மசோதாவில் பலதார திருமணங்களுக்கு தடை, மகன்களுக்கும் மகள்களுக்கும் சமமான சொத்துப் பங்கீடு, திருமண உறவில் பிறந்த குழந்தைகள் மற்றும் திருமண உறவுக்கு அப்பால் பிறந்த குழந்தைகளுக்கு இடையிலான வேறுபாட்டை நீக்கி, இறப்புக்குப் பிறகு சமமான சொத்துரிமையை தத்தெடுக்கப்பட்ட குழந்தைக்கும் சொந்த குழந்தைக்கும் வழங்குவது என பல்வேறு விதிகள் இடம்பெற்று இருக்கின்றன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications