For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வடபோச்சே... கிங்மேக்கராகும் வாய்ப்பை இழந்த தேவகவுடா!

கர்நாடகாவில் தேவ கவுடா கட்சியின் ஆதரவை பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என கூறப்பட்ட நிலையில் தேவ கவுடா அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கிங்மேக்கராகும் வாய்ப்பை இழந்த தேவகவுடா!- வீடியோ

    பெங்களூரு: கர்நாடகாவில் தேவ கவுடா கட்சியின் ஆதரவை பெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என கூறப்பட்ட நிலையில் தேவ கவுடா அந்த வாய்ப்பை இழந்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள 222 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவியது.

    இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்ததால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் நிமிடத்துக்கு நிமிடம் மாறியது. இதனால் தொங்கு சட்ட சபை ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வந்தனர்.

    தேவ கவுடா கிங் மேக்கர்

    தேவ கவுடா கிங் மேக்கர்

    தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு அதிகம் என தெரிவித்தன. மேலும் தேவ கவுடாவின் மதசார்பற்ற கட்சிதான் கிங் மேக்கராக இருக்கும்.

    யாருக்கு ஆதரவு?

    யாருக்கு ஆதரவு?

    அந்த கட்சியின் ஆசிபெறும் கட்சியே ஆட்சியமைக்கும் என கூறப்பட்டது. இதனால் தேவ கவுடா யாருக்கு ஆதரவு தெரிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

    பாஜக ஆட்சி உறுதி

    பாஜக ஆட்சி உறுதி

    ஆனால் விடாமல் விரட்டிய பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களையும் தாண்டி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

    கிங் மேக்கர் வாய்ப்பை இழந்தார்

    கிங் மேக்கர் வாய்ப்பை இழந்தார்

    பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதால் கிங் மேக்கராகும் வாய்ப்பை தேவ கவுடா இழந்துள்ளார். தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் 40 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

    English summary
    JDS leader Deva Gowda losses the Chance of to be the king maker. NJP is leading in Karnataka assembly election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X