"ஒரே நொடி.. பல வீடுகள் காலி.." இமாச்சலைப் புரட்டி போடும் பெரு வெள்ளம்.. பதற வைக்கும் வீடியோ!
சிம்லா: வட இந்தியாவில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கும் நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லா நகரையே இந்த கனமழை புரட்டிப் போட்டுள்ளது. இது தொடர்பான பல ஷாக்கிங் வீடியோக்கள் இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
வட இந்தியாவில் பல இடங்களில் மூன்றாவது நாளாக இன்றும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக ஹிமாச்சல பிரதேசத்தில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இந்த கனமழையால் அங்கே உள்ள பல ஆறுகளில் நீர் அபாயக் கட்டத்தைத் தாண்டியுள்ளது. கொட்டி தீர்க்கும் கனமழை இமாச்சலப் பிரதேசம் முழுவதும் பலத்த தேசத்தை ஏற்படுத்தியுள்ளது.

மழை வெள்ளம்: பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. மரம் விழுவது, மண் சரிவு உள்ளிட்ட காரணங்களால் பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரயில் சேவையும் அங்கே மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கே வெள்ளத்தின் கோரப் பாதிப்புகளை விளக்கும் பல வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.
கனமழையால் அங்கு மொத்தம் 1,694 சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை கொட்டி வரும் நிலையில், அங்கே குடிநீர் சப்ளையும் பாதிக்கப்பட்டுள்ளது நகைமுரன்.. 3ஆவது நாளாக அங்கே பல இடங்களில் குடிநீர் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சிம்லா அருகே சாபாவில் உள்ள பவர் ஹவுஸ் வெள்ளத்தில் மூழ்கியதே இதற்குக் காரணமாகும். சிம்பாவுக்கு தினசரி 42 MLD தேவை என்ற நிலையில், சிம்லா நகரத்திற்கு இப்போது 11 MLD தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது.
Praying for Himachal. For decades it has been my abode for months every year. I have seen it getting overloaded and crumbling due to unregulated growth. Many cities including Shimla are waiting to collapse some day. pic.twitter.com/2yQLMwx5fc
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) July 10, 2023
பாதிப்பு: அங்கே கடும் வெள்ளத்தால் பல இடங்களில் வீடுகள் அப்படியே அடித்துச் செல்கிறது. இது தொடர்பாகவும் பல வீடியோக்கள் பரவி வருகிறது. ரயில் பாதையில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், 5 இடங்களில் பாதை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 4 இடங்களில் மலைச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் சிம்லா- கல்கா பாதையில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
HRTC bus passengers saved their lives by coming out of the windows near shimla bypass chowk in Dehradun. pic.twitter.com/AhcZ1N6UGQ
— Nikhil Choudhary (@NikhilCh_) July 10, 2023
சிம்லா- கல்கா இடையேயான ரயில் சேவை மட்டுமின்றி சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையான இங்கே நிலச்சரிவு ஏற்பட்டு, மழை வெள்ளம் போல அடித்துச் செல்லும் நிலையில் இந்த சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மண் சரிவு காரணமாக இந்த பாதையைப் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சில இடங்களில் மக்கள் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். இது மிக பெரிய ஆபத்தை அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.
மோசமான பாதிப்பு: அதேபோல அங்கே இருக்கும் பாலம் ஒன்றின் மீது வாகனங்கள் வழக்கம் போலச் சென்று கொண்டிருக்க, கீழே காட்டாற்று வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. சிம்லாவின் ஜுப்பர்ஹட்டி விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், அதுவும் மூடப்பட்டது.
கனமழையால் மண் சரிவும் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. அங்கே அமைந்திருந்த வீட்டின் கீழே இருந்த மண் அரித்து செல்லப்பட்ட நிலையில், அது அப்படியே சரிந்தது. இது தொடர்பான ஷாக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அடித்துச் செல்லப்பட்ட கார்கள்: அங்குள்ள நெடுஞ்சாலைகளில் எல்லாம் கனமழையால் காட்டாற்று வெள்ளம் போல நீர் அடித்துச் செல்கிறது. இதனால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட டூ வீலர்கள் மட்டுமின்றி கார்கள் கூட ஏதோ சின்ன சின்ன பொருட்களைப் போல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் திங்கு கோவில் அருகே எடுக்கப்பட்ட வீடியோவை பிடிஐ செய்தி நிறுவனம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மொத்தம் 44 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் திங்கு கோவில் அருகே இருக்கும் சாலை அப்படியே மண் சரிவு காரணமாக சரிகிறது.
அங்கு சிம்லா பைபாஸ் சௌக் அருகே ஹரியானா மாநில அரசுக்குச் சொந்தமான பேருந்து வந்து கொண்டிருந்தது. ஓரிடத்தில் வெள்ளம் அதிகமாகச் சென்ற போதிலும், அதைக் கடந்துவிடலாம் என நினைத்து டிரைவர் வண்டியை இயக்கியுள்ளார். இருப்பினும், எதிர்பாராத விதமாகப் பாதி தூரம் வந்ததும் அது ஒரு பக்கம் கவிழ ஆரம்பித்துள்ளது. இதனால் அதிர்ந்து போன பயணிகள் பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே குதித்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications