கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் தேவசம் போர்டு.. சபரிமலையில் 18-ஆம் தேதி முதல் பெண்கள் அனுமதி?
திருவனந்தபுரம்: கோர்ட் உத்தரவை அமல்படுத்தும் விதமாக சபரிமலையில் அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி முதல் பெண்களை அனுமதிக்கலாம் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
கேரள மாநிலம், பத்தனம்திட்ட மாவட்டத்தில் உள்ளது சபரிமலை. பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலுக்கு கடந்த பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
தெய்வத்தை வழிப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்பினர் மனு தாக்கல் செய்தனர்.

தீர்ப்பு
இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர். எப். நாரிமன், சந்திரசூட், கான்வில்கர், பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பை அளித்தது.

தீர்ப்பளித்த 4 நீதிபதிகள்
இதில் 4 நீதிபதிகள் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் வழிப்பாட்டு முறையில் ஆண், பெண் பேதம் காட்டி பெண்களை பலவீனப்படுத்தக் கூடாது. எனவே அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மாறுப்பட்ட கருத்து அளித்த நீதிபதி
ஆனால் பெண் நீதிபதி மட்டும் மத ரிதீயான விஷயத்தில் நீதிமன்றம் தலையிட கூடாது என்றார். எனினும் 4 நீதிபதிகள் அளித்த தீர்ப்பே அமல்படுத்தப்படும். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை கேரள அரடு வரவேற்றுள்ளது. அது போல் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தேவசம் போர்டு கூறியிருந்தாலும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு உண்டு என்று கூறியுள்ளது.

ஆலோசனை
இதனால் பெண்கள் எப்போது சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. இந்நிலையில் வரும் 3-ஆம் தேதி திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

18-ஆம் தேதி முதல் அனுமதி
இந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் 18-ந் தேதி முதல் பெண்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களை அனுமதிப்பது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் பினராயி விஜயனுடன் தேவசம் போர்டு அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications