ஐயப்ப பக்தர்கள் எங்களை அடையாளம் கண்டு கொண்ட போதிலும் எதிர்க்கவில்லை.. பிந்து நெகிழ்ச்சி
Recommended Video

பத்தினம்திட்டா: சபரிமலைக்கு நாங்கள் சென்ற போது எங்களை பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டபோதிலும் அவர்கள் யாரும் எங்களை தடுக்கவில்லை என்று சபரிமலைக்கு சென்று வெற்றிகரமாக சுவாமி தரிசனம் செய்த பிந்து மற்றும் கனகதுர்கா ஆகியோர் தெரிவித்தனர்.
சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களை அனுமதி அளிக்கும் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பாஜக, இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்தன. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச்சேர்ந்த கனகதுர்காவும் (46) கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்துவும் (40) போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து பிந்து கூறுகையில் நாங்கள் பம்பாவுக்கு வந்தவுடன் போலீஸ் பாதுகாப்பை கேட்டோம். அதன்படி மலையேறுவதற்கு அவர்கள் எங்களுக்கு பாதுகாப்பு கொடுத்தனர்.

போராட்டம்
பெண்கள் உடையிலேயே சென்ற எங்களை பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். எனினும் அவர்கள் எங்களை தடுக்கவில்லை, போராட்டம் நடத்தவில்லை. அரசியல் உள்நோக்கத்துடன் உள்ளவர்கள் மட்டுமே போராட்டம் நடத்துகின்றனர்.

சட்ட உரிமை
மற்றபடி எந்த பக்தரும் போராடவில்லை. பாலின நீதிக்காக போராடும் இந்த சமூகம் மற்றும் லட்சக்கணக்கான பெண் பக்தர்களின் பிரதிநிதிகளாகவே இங்கு வந்தோம். எங்களுக்கான சட்ட உரிமையை பின்பற்றினோம்.

100 சதவீதம் உறுதி
நானும் கனகதுர்காவும் வீட்டுக்கு போக எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. எனினும் போலீஸார் எங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பு போட்டுள்ளனர். கோயிலுக்குள் சென்றதன் மூலம் யார் மனதையும் நாங்கள் புண்படுத்தவில்லை என்பதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்றார் அவர்.

ஆராய்ந்து வருகிறோம்
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸம் போர்டு கூறுகையில் இரு பெண்களும் கோயிலுக்குள் நுழைந்தது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம். அப்போதுதான் அவர்கள் சுவாமி தரிசனம் செய்தார்களா இல்லையா என்பது தெரியவரும் என்று தெரிவித்துள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications