டோணியின் ஹம்மர் காரை மஹிந்திரா ஸ்கார்பியோ என பதிவு செய்த ராஞ்சி போக்குவரத்து துறை
ராஞ்சி: கிரிக்கெட் வீரர் டோணியின் ஹம்மர் காரை ராஞ்சி போக்குவரத்து துறை தவறுதலாக மஹிந்திரா ஸ்கார்பியோ என்று பதிவு செய்துவிட்டதாக மாவட்ட போக்துவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் டோணிக்கு அதிவேக கார்கள், பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் கடந்த 2009ம் ஆண்டு ரூ. 1 கோடி மதிப்புள்ள ஹம்மர் ஹெச்2 காரை வாங்கியுள்ளார். அந்த காரை ஜார்க்கண்ட் மாநில ராஞ்சி போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்.

அப்போது ராஞ்சி போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த டைப்பிஸ்ட் ஹம்மர் காரை மஹிந்திரா ஸ்கார்பியோ என்று தவறுதலாக டைப் செய்துவிட்டாராம். டைப்பிஸ்ட் செய்த தவறால் டோணி வாகனத்தை பதிவு செய்ய ரூ.4 லட்சத்திற்கு பதில் ரூ.53 ஆயிரம் மட்டுமே செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
டைப்பிஸ்ட் அப்பொழுது செய்த தவறுக்காக டோணி அபராதத்துடன் வாகன பதிவுக்கான மீதித் தொகையையும் தற்போது செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை ராஞ்சி மாவட்ட போக்குவரத்து அதிகாரி நாகேந்திர பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications