விவசாயி தற்கொலையில் புதிய திருப்பம்: ஆம் ஆத்மி தூண்டியதாக எப்.ஐ.ஆர். போட்டது டெல்லி போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயி கஜேந்திரசிங்கை தற்கொலைக்கு ஆம் ஆத்மி கட்சியினரே தூண்டியதாக டெல்லி போலீஸின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆம் ஆத்மி தலைவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக பிரமாண்ட பேரணி நடத்தினர். இந்த பேரணியின் போது ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திரசிங் என்ற விவசாயி திடீரென ஜந்தர் மந்தரில் உள்ள ஒரு மரத்தில் ஏறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

Did AAP abet the farmer's suicide?

தற்கொலை செய்து கொண்ட கஜேந்திரசிங் விவசாயியே அல்ல என்றும் அவர் விவசாயிதான் அவருக்கு விவசாயத்தில் கொஞ்சம் நட்டம் ஏற்பட்டது.. அதனால் நட்ட ஈடு கிடைக்கலை.. தூக்கில் தொங்கிவிட்டார் என்றும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பாக தீவிரமாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர்தான் கஜேந்திரசிங்கை தற்கொலைக்குத் தூண்டியதாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) போட்டுள்ளது டெல்லி போலீஸ்.

டெல்லி போலீஸ் போட்டிருக்கும் எப்.ஐ.ஆர்.-ல் இடம்பெற்றுள்ள விவரங்கள்:

  • டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே கூட முடியும். ஆனால் ஆம் ஆத்மியினர் சுமார் 20 ஆயிரம் கூடிவிட்டனர்.
  • மிகச் சிறிய இடத்தில் இவ்வளவு பெரிய கூட்டம் கூடியதால் போலீசாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போனது.. ஆம் ஆத்மி கட்சியினரும் ஒத்துழைப்பு தரவில்லை.
  • மேலும் பேரணி நடத்துவதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் அனுமதி பெறவே இல்லை.
  • ஆம் ஆத்மி கட்சியினர்தான் கஜேந்திரசிங்கை தற்கொலைக்குத் தூண்டியுள்ளனர்.
  • இதனால் தற்கொலைக்குத் தூண்டினார் என்ற ஐ.பி.சி. பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • மேலும் இந்த வழக்கு விசாரணையின் போக்கு குறித்து டெல்லி போலீசார் தெரிவித்ததாவது:
  • கஜேந்திரசிங்கின் குடும்பத்தினர், நண்பர்களிடம் விசாரணை நடத்திய போது அவர் டெல்லிக்கு சென்று தற்கொலை செய்து எண்ணத்தில் இருந்ததில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.
  • அவர் தமது உறவினரிடம் கடைசியாக பேசும் போதுகூட, 10 நிமிடத்தில் டி.வி.யை பாருங்க.. அதன் பிறகு மதிய உணவு சாப்பிட வருகிறேன் என்றுதான் கஜேந்திரசிங் கூறியுள்ளார்.
  • இதனால்தான் கஜேந்திரசிங் மரணம் தொடர்பான வழக்கு தற்கொலைக்குத் தூண்டியதால் நிகழ்ந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது,
  • அதனால் குறைவான இடத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியது, பேரணிக்கு அனுமதி பெறாது, தற்கொலைக்குத் தூண்டியது ஆகிய கோணங்களில் ஆம் ஆத்மி தலைவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+