கணக்கில் காட்டாத 6000 கோடியை வைர வியாபாரி ஒப்படைத்தாரா.. இல்லையா?
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் கணக்கில் காட்டாத 6000 கோடியை அரசிடம் ஒப்படைத்தார் என்று வைரலாக பரவிய செய்தி தவறானது என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வைர வியாபாரியான லால்ஜிபாய் பட்டேல், கணக்கில் காட்டாமல் தன்னிடம் வைத்திருந்த 6000 கோடி ரூபாய் பணத்தை அரசிடம் ஒப்படைத்தார் என்ற செய்து வைரலாக பரவியது. ஆனால் அது உண்மையான செய்தி அல்ல என்று தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 9ம் தேதியில் இருந்து 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் 2.5 லட்சம் வரை பழைய நோட்டுக்களை மாற்றுபவர்களுக்கு எந்தவித வரியும் கிடையாது என்றும் அதற்கு மேல் பணம் மாற்றுபவர்களுக்கு 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கையில் இருக்கும் பழைய நோட்டுகளை சாதாரண மக்கள் வங்கியில் செலுத்தி புதிய நோட்டுகளை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்தார் என்ற செய்தி வைரலாக பரவியது. அதாவது அவரிடம் இருந்த கணக்கில் காட்டாத பணம் 6000 கோடிக்கு 1800 கோடி ரூபாய் வட்டி செலுத்த வேண்டும், பின்னர், வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு அதனை செலுத்த வேண்டும். ஆக மொத்தம் 5400 கோடி ரூபாய் வரி பிடித்தம் செய்யப்படும் என்பதால் லால்ஜிபாய்க்கு வெறும் 600 கோடி ரூபாய்தான் கிடைக்கும். இதனால் லால்ஜிபாய் மொத்தமாக 6000 கோடி ரூபாயையும் பெரிய மனதோடு அரசிடம் ஒப்படைத்துவிட்டார் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து தீவிரமாக விசாரித்த போது, அந்த செய்தி முழு பொய் என்பது தெரிய வந்தது. "தான் 6000 கோடி ரூபாயை ஒப்படைக்கவில்லை" என்று லால்ஜிபாய் படேல் மறுத்துள்ளார். ஆக, இவர் 6000 கோடியை அரசிடம் ஒப்படைக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
ஆனால் இவரைப் பற்றி இன்னொரு சுவாரஸ்யமான செய்தி இருக்கிறது. அது, சில மாதங்களுக்கு முன்பு, மோடி, மோடி என்று பிரதமரின் பெயரிலேயே வடிவமைக்கப்பட்டு, அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த போது பிரதமர் மோடி அணிந்த நீள நிற கோட்டை 4.3 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தவர் இதே லால்ஜிபாய் படேல்தான்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications