இந்தியாவுக்கு மோடி பாணி சர்வாதிகாரம் தேவை: சொல்வது பாஜகவின் பரேஷ் ராவல்
அகமதாபாத்: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் "சர்வாதிகாரி" யாக விமர்சித்து வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவலோ அதை நியாயப்படுத்தி பேசி புதிய சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறார்.

பாலிவுட் நடிகரான பரேஷ் ராவல்தான் அகமதாபாத் லோக்சபா தொகுதியின் பாஜக வேட்பாளர். இத்தொகுதியில் ஏழு முறை எம்.பி.யாக இருந்த ஹரீன் பாதக்குக்குப் பதிலாக இம்முறை பரேஷ் ராவலை நிறுத்தியிருக்கிறது பாஜக. அவர்தான் மோடி குறித்த திரைப்படம் ஒன்றில் மோடியாக நடிக்கவும் இருக்கிறார்.
நரேந்திர மோடியை எதிர்க்கட்சிகள் சர்வாதிகாரி என விமர்சிப்பது குறித்து கருத்து தெரிவித்த பரேஷ் ராவல், மோடி அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு அதிகார மையம்தான். அவர்தான் அரசின் பெரும்பகுதியை வழிநடத்திச் செல்கிறவர். அதனால்தான் மற்றவர்கள் அவரை சர்வாதிகாரி என விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் மக்களைப் பற்றி சிந்திக்கிற, மக்கள் நலனுக்காக செயலாற்றுகிற, அவர்களது தேவைகளைப் புரிந்து கொள்கிற அத்தகைய சர்வாதிகாரிகள்தான் நமக்குத் தேவை என்பது என் கருத்து.
நரேந்திர மோடி, கூட்டணி அரசின் பிரதமராக இருக்க மாட்டார். மோடிக்கென்று ஒரு தனி பாணி இருக்கிறது. அவர் அதில்தான் பயணிப்பார். ஆனால் கூட்டணி அரசாக இருந்தால் ஒவ்வொரு தலைவரும் ஒவ்வொரு திசையில் செல்ல சொல்வார்கள். அதனால் அவரால் செயல்பட முடியாது என்றார்.
முன்னதாக தமது அகமதாபாத் தொகுதி மக்களின் விருப்பமும் என் விருப்பமுமே மோடியை நாட்டின் பிரதமராக்குவது மட்டுமே என்றும் கூறியிருந்தார் பரேஷ் ராவல்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications