கட்சிக்குள் ஆதரவு இல்லை... தேர்தல் தோல்விக்கு காங்கிரஸே காரணம்: ஷீலா தீட்சித்
டெல்லி: டெல்லி சட்டசபைத் தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்றும், போதுமான ஆதரவு தமக்கு கட்சியிடமிருந்து கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் ஷீலா தீட்சித்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பா.ஜனதா 31 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. தேர்தலில் தோல்வியடைந்த ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தேர்தல் தோல்வி குறித்து செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார் ஷீலா தீட்சித். அதில், அவர் கூறியிருப்பதாவது....

ஆதரவு இல்லை....
‘எனக்கு எங்கள் கட்சியிடமிருந்து போதுமான ஆதரவு கிடைத்திருக்க வேண்டும்; ஆனால் அப்படி கிடைக்கவில்லை' எனத் தெரிவித்துள்ளார்.

குறைத்து மதிப்பிட்டு விட்டோம்.....
ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களில் வெற்றிபெற்று, இரண்டாவது இடத்தை கைப்பற்றி உள்ளது குறித்த கேள்விக்கு, " நாங்கள் அவர்களை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம்" என்று பதிலளித்துள்ளார்.

கெஜ்ரிவால் புத்திசாலி....
நீங்கள் போட்டியிட்ட டெல்லி தொகுதியில் உங்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அரவிந்த கெஜ்ரிவாலுக்கு, அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்ற அடிப்படையில் அவருக்கு என்ன யோசனை சொல்ல விரும்புகிறீர்கள்? எனக் கேட்டபோது," என்னைவிட அரவிந்த் கெஜ்ரிவால் புத்திசாலியானவர்" எனத் தெரிவித்துள்ளார்.

3முறை முதல்வர்...
ஷீலா தீட்சித் இதுவரை 3 முறை முதல்வராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications