டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா உயர்கின்றது - இன்று நள்ளிரவு முதல் அமல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டீசல் விலை லிட்டருக்கு 95 காசுகள் உயர்த்தப்படுகிறது. இந்த விலை ஏற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றது. ஆனால், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை நிர்ணயித்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டீசல் விலை லிட்டருக்கு 95 காசுகள் உயருகிறது.

Diesel price hiked by 95 paise a litre by midnight Thursday

கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் இரண்டாவது முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்த்தப்பட்டது. அப்போதும் பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லை.

சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திருத்திமைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி மற்றும் 15 ஆகிய தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 99 காசுகள் அதிகரித்து ரூபாய் 47.05 ஆக விற்கப்படும். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரவுள்ளது. எனினும், பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+