அம்ரிதா ராயுடன் திக்விஜய் சிங் திருமணம் நிறுத்தம்?: பின்னணியில் சாமியார்??
டெல்லி: டிவி தொகுப்பாளினியை இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக அறிவித்து அதிர்வலைகளை ஏற்படுத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தற்போது அந்த முடிவை கைவிட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அம்ரிதா ராயுடன் காதல்... டுவிட்டரில் அறிவிப்பு...
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங் (67) முதல் மனைவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மரணமடைந்தார். இதனிடையே திக்விஜய்சிங்கிற்கும் தொலைக்காட்சி தொகுப்பாளினி அம்ரிதா ராய் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. அம்ரித்தா ராய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துக்கு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் கடந்த மாதம் 30ம் தேதி திக்விஜய்சிங் அறிவித்தார்.

டுவிட்டரிலேயே கடும் எதிர்ப்பு:
இதையடுத்து பெரும்பாலானோர் டுவிட்டரிலேயே திக்விஜய்சிங்கிற்கு கடும் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பதிவு செய்தனர். திக்விஜய்சிங்கின் தம்பி மனைவியும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதே நேரம் எம்.எல்.ஏவாக உள்ள மகன் ஜெய்விந்தர்சிங் தந்தையின் திருமண முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

சுவரூபானந்தா சரஸ்வதி சுவாமிஜி ஆசி வழங்க மறுப்பு?
இந்நிலையில், திக்விஜய்சிங் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக மத்திய பிரதேச உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. திக்விஜய்சிங் ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர். தனது 2வது திருமணத்திற்கு ஆசி பெறுவதற்காக ஆன்மீக குருவான கங்கா ஆசிரமத்தின் சுவரூபானந்தா சரஸ்வதி சுவாமிஜியை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் சுவாமிஜியோ, திக்விஜய்சிங்கிற்கு ஆசி வழங்க மறுத்துவிட்டாராம்.

திக்விஜய்சிங் மறுபரிசீலனை?
உலக நன்மையை கருதிதான் ஆசி வழங்க முடியுமே தவிர, மக்களின் நலனுக்கு எதிராக விஷயங்களுக்கு ஆசி வழங்க முடியாது என்று திக்விஜய் சிங்கை திருப்பி அனுப்பி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் 2வது திருமணம் செய்யும் முடிவை திக்விஜய்சிங் மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications