திக்விஜய் சிங் திருமணத்திற்கு பத்திரிக்கை அடிச்சாச்சு: தேதி மட்டும் ரகசியம்
போபால்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், பத்திரிக்கையாளரான அம்ரிதா ராய் திருமண தேதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர். புற்றுநோயால் அவதிப்பட்ட அவரது மனைவி ஆஷா சிங் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். அவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் 67 வயதாகும் திக்விஜய் சிங்கிற்கும் திருமணமாகி கணவரை விவாகரத்து செய்யும் பத்திரிக்கையாளரான அம்ரிதா ராய்க்கும் இடையேயான உறவு வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அம்ரிதாவை மணக்க திக்விஜய் சிங் திட்டமிட்டுள்ளார். திருமண தேதி குறித்து பத்திரிக்கையும் அடித்தாகிவிட்டது என்று கூறப்படுகிறது. ஆனால் திருமண தேதியை மட்டும் யாருக்கும் தெரிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளார்களாம்.
அம்ரிதாவை பிரிந்து வாழும் அவரது கணவரும் அவரின் இந்த புதிய உறவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications