அம்ரிதா ராயை மணம் புரிந்தார் திக்விஜய் சிங்... சென்னையில் திருமணம் நடந்ததாக தகவல்
டெல்லி: தான் காதலித்து வந்த 44 வயதான முன்னாள் டிவி பத்திரிகையாளர் அம்ரிதா ராயை, காங்கிரஸ் பொதுச் செயலாளருமான 68 வயது திக்விஜய் சிங் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த மாதம் சென்னையில் வைத்து இந்தத் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வருடம் இவர்களது ரகசிய உறவும், அந்தரங்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து தங்களுக்குள் இருக்கும் உறவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்புக் கொண்டார் திக்விஜய் சிங்.

இந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் சென்னையில் வைத்து ரகசியமான முறையில் மணம் புரிந்து கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது திக்விஜய் சிங் அமெரிக்காவுக்குப் போயுள்ளார். அவரது தரப்பினர் இந்தத் திருமணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதேசமயம், அம்ரிதா ராய் தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது அவர் ராஜ்யசபா டிவியில் பணியாற்றி வருகிறார். அவர் தற்போது விடுப்பில் இருப்பதாக ராஜ்யசபா டிவி அலுவகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிட்டரில் தனது உறவை ஒத்துக் கொண்ட திக்விஜய் சிங், அம்ரிதா ராயும், அவரது கணவரும் ஏற்கனவே பரஸ்பரம் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். விவாகரத்து முடிவுக்கு வந்ததும் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம் என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
அம்ரிதா ராய் வெளியிட்டிருந்த டிவிட்டில், நானும் எனது கணவரும் பிரிந்து விட்டோம். விவாகரத்து கோரியுள்ளோம். அது இறுதியானதும் திக்விஜய் சிங்கை மணப்பது குறித்து முடிவெடுப்பேன் என்று கூறியிருந்தார்.
திக்விஜய் சிங்கின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இந்தத் தம்பதிக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications