உங்க வீட்டுக்காரர் அசிங்கமாக இருக்கிறார்.. தீபிகாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட நிருபர்!
டெல்லி: ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலிடம் ஒரு செய்தியாளர் செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.
மென்எக்ஸ்பி என்ற ஆடவருக்கான லைப்ஸ்டைல் தளத்தில் கவர்ச்சிகரமாக இல்லாத, அவலட்சணமான ஆண் என்ற பெயரில் ஒரு பட்டியலைப் போட்டுள்ளனர். அதில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் இடம் பிடித்துள்ளார்.
அந்தக் கட்டுரையில் தினேஷ் கார்த்திக் பார்க்க நன்றாக இல்லை என்றும் கவர்ச்சிகரமாக இல்லை என்றும் குறிப்பிட்டு எழுதியுள்ளனர்.

இதைப் படித்துப் பார்த்த தினேஷ் கார்த்திக்கின் மனைவி தீபிகா பல்லிகல் கடுப்பாகி விட்டார். உடனே டிவிட்டரில் இதுகுறித்து பொங்கித் தீர்த்து விட்டார் தீபிகா.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் கூறுகையில் ஹேய் கொஞ்சமாச்சும் அறிவுப்பூர்வமான விஷயத்தைப் பத்திப் போடுங்க. என் கணவர் எவ்வளவு ஹாட்டாக இருக்கிறார் என்று சாடியுள்ளார் தீபிகா.
Hey @MensXP try publishing things which make sense. Oh and Just btw my husband is HOT😍 https://t.co/4J7MsyFScF pic.twitter.com/Kmavmc4070
— Dipika P Karthik (@DipikaPallikal) December 13, 2015 ஆகஸ்ட் 18ம் தேதிதான் தீபிகா, தினேஷ் திருமணம் நடந்தது என்பது நினைவிருக்கலாம். இது காதல் திருமணம். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காகவும், டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணிக்காகவும் ஆடியுள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனைகளில் முக்கிய இடத்தில் இருப்பவர் தீபிகா. சர்வதேச அளவிலும் பிரபலமானவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications