விசாரணை முடியும் வரை, முதல்வராக ஜெ. பதவி வகிக்க தடை விதிக்க கோரும் கர்நாடகம்!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை முடிவடையும்வரை, ஜெயலலிதாவை தமிழக முதல்வராக பதவி வகிக்க தடை விதிக்க வேண்டும் என்றும், விசாரணையின் இறுதியில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்றும் இரு கோரிக்கைகள், கர்நாடக தரப்பால், சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் கோரப்பட்டுள்ளன.

தகவல்கள்
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. சுமார் 2400 பக்கங்கள் கொண்ட இந்த மனுவில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தபடி உள்ளன.

முதலில் முதல்வர் பதவி
ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை பறிக்க வேண்டும் என்று அப்பீல் மனுவில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்த பிறகு கீழ்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இறுதி செய்யுங்கள், அதுவரை, ஜெயலலிதா முதல்வராக பதவியில் தொடர கூடாது என்று உத்தரவிடுங்கள் என்று கேட்கிறது அந்த மனு.

தண்டனை
மனுவிலுள்ள முக்கிய அம்சங்கள்: ஜெயலலிதா உள்ளிட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் அவர்கள் தண்டனைக்குள்ளாகினர். ஆனால் ஹைகோர்ட் இந்த நால்வரையும் விடுதலை செய்துள்ளது.

தப்புகள்
ஹைகோர்ட் தீர்ப்பில் ஏகப்பட்ட லாஜிக் தப்புகள், கணித தவறுகள் உள்ளன. அதன் அடிப்படையில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையாகியுள்ளதை ஏற்க முடியாது. பெங்களூர் நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. எனவே, சட்டப்படி, அவர் முதல்வர் போன்ற பொது பதவிகளை வகிக்க முடியாதவராகிவிடுகிறார். ஹைகோர்ட் தீர்ப்பால்தான் அவர் முதல்வராக முடிந்தது.

பதவி பறிப்பு
எனவே, சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை நிலைநாட்ட, ஹைகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதாவை முதல்வர் பதவியில் இருந்து இறங்க உத்தரவிட வேண்டும். விசாரணையின் முடிவில், கீழ்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனு கேட்டுக்கொண்டுள்ளது. கீழ்நீதிமன்றம் விதித்த தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு தரப்பு கோரிக்கை வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications