சென்னை நர்சிங் கல்லூரிகளில் ரூ.35 லட்சம் லஞ்சம்.. இந்திய தணிக்கைத்துறை இயக்குநர் கைது
டெல்லி / சென்னை: சென்னை நர்சிங் கல்லூரிகளில் ரூ35 லட்சம் லஞ்சம் கேட்டதாக இந்திய தணிக்கைத் துறை இயக்குநர் பரமசிவம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய தணிக்கைத்துறையில் இயக்குனராக பணியாற்றிய பரமசிவம் சென்னையில் உள்ள நர்சிங் கல்லூரிகளில் ரூ.35 லட்சம் லஞ்ச கேட்டார். மேலும், முன்தொகையாக ரூ.5 லட்சத்தை சென்னையில் உள்ள தன் மைத்துனர் டாக்டர் சிவராமிடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
இதுகுறித்து சி.பி.ஐ. போலீசாரிடம் நர்சிங் கல்லூரி நிர்வாகி ஒருவர் புகார் செய்தார். அதனடிப்படையில் சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாக்டர் சிவராம் லஞ்ச பணம் ரூ.5 லட்சத்தை வாங்கும்போது, அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
பின்னர், அவரை சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு முதன்மை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதையடுத்து டாக்டர் சிவராமை வருகிற மே 2ந் தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க நீதிபதி வணங்காமுடி உத்தரவிட்டார்.
இந்நிலையில் டெல்லியில் தலைமறைவாக இருந்த பரமசிவனை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை, டெல்லி மற்றும் நொய்டாவில் சோதனையில் ஈடுபட்டனர்.
பரமசிவனின் வீட்டில் சோதனை செய்த போது ரூ. 1 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications