Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகுல் காந்தியுடன் பா.ரஞ்சித் சந்திப்பு.. பேரறிவாளனை விடுவிக்க கோரிக்கை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குனர் ரஞ்சித் சந்திப்பு- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்கும்படி ராகுலிடம் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.

    டெல்லி சென்று இருக்கும் பா.ரஞ்சித் ராகுல்காந்தி இல்லத்தில் வைத்து அவரை சந்தித்து இருக்கிறார். இன்று காலை நடந்த இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

    Director P.Ranjith meets Rahul Gandhi in his residence

    இதில் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதம் நடத்தியதாக கூறப்படுகிறது. அரசியல், சினிமா மற்றும் சமுதாயம் குறித்து இருவரும் விவாதம் நடத்தியதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

    மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுவிக்கும்படி ராகுலிடம் பா.ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார். பேரறிவாளனை விடுவிக்க உதவி கேட்டு ராகுலிடம் ரஞ்சித் கோரிக்கை வைத்துள்ளார்.

    இதுகுறித்து பா.ரஞ்சித், ''பேரறிவாளனை விடுவிக்க ஆட்சேபம் இல்லையென்று ராகுல் காந்தி தெரிவித்தார்.பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உதவுவதாக ராகுல் கூறினார். ராகுலின் பேச்சு நம்பிக்கை அளித்தது'' என்றுள்ளார்.

    இதுகுறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், ''மெட்ராஸ், காலா, கபாலி படத்தின் வெற்றிக்கு பின் இருக்கும் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் கலையரசனை சந்தித்தேன். இந்த சந்திப்பில், அரசியல், சமூகம், சினிமா குறித்து விவாதம் செய்தோம். '' என்றுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ராகுல்காந்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தார். அதை தொடர்ந்து தற்போது ரஞ்சித்தை சந்தித்து இருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+