ஜெ., ரஜினியை விட ஷங்கர் தி கிரேட் என்ற ராம்கோபால் வர்மா கைது?
ஹைதராபாத்: ஜெயலலிதா, ரஜினியை விட ‘ஷங்கர் தி கிரேட்' என்று கூறிய இயக்குனர் ராம்கோபால்வர்மாவை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
‘சிவா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் கதையாசிரியராகவும் தன் திரையுலகப் பயணத்தை தொடங்கியவர் ராம் கோபால் வர்மா.

1989ஆம் ஆண்டு வெளியான தன் முதல் படத்திலேயே பல விருதுகளை வென்றார். சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படம் ஆகியவற்றிக்காக ஆந்திர அரசின் நந்தி விருதை பெற்றது இப்படம்.
தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60க்கும் மேற்பட்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் இவர். இவர் நடிகர் சூர்யாவை வைத்து ‘ரத்த சரித்திரம்' என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இவரது பெரும்பாலான படங்கள் மற்றும் இவரது கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளாவது சகஜம். சிலசமயம் டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி, சிக்கலில் மாட்டிக்கொள்வார்.
சமீபத்தில் ‘ஐ' திரைப்படத்தைப் பற்றி கூறிய ராம்கோபால் வர்மா, ஜெயலலிதா, ரஜினியை விட ‘ஷங்கர் தி கிரேட்' என்று கூறியிருந்தார்.
தற்போது இவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். என்ன காரணம் என்பது தெரியவில்லை. இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.
இவர் அடிக்கடி சர்ச்சைக்குள் சிக்கிகொள்வதால், இவரது கைதை பெரிதுப்படுத்தவில்லை பெரும்பாலான சினிமா ரசிகர்கள். மேலும், சில ரசிகர்கள் இது ஏதாவது படத்தின் ஷுட்டிங்காக இருக்கும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications