ஒடிஷாவில் தாலி கட்ட சில மணிநேரத்திற்கு முன்பு மணப்பெண், காதலன் குத்திக் கொலை
பெஹ்ராம்பூர்: ஒடிஷாவில் திருமணத்தன்று 20 வயது மணப்பெண்ணும், அவரது காதலனும் கொலை செய்யப்பட்டனர்.
ஒடிஷா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பெஹ்ராம்பூரைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் ஹலாதியபதரா என்ற கிராமத்தைச் சேர்ந்த 22 வயது வாலிபரை காதலித்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டில் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருடன் மே 11ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
திருமணத்தையொட்டி நேற்று இரவு மணப்பெண்ணின் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது. விருந்துக்கு அந்த பெண்ணின் காதலனின் குடும்பத்தாரும் அழைக்கப்பட்டனர்.
நள்ளிரவில் விருந்து முடிந்தபோது மணப்பெண் தனது காதலனுடன் சேர்ந்து அவரது வீட்டுக்கு சென்றுவிட்டார். இது குறித்து அறிந்த மணப்பெண்ணின் சகோதரர்கள் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று தங்கள் சகோதரியை வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் அந்த பெண் வர மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த பெண்ணையும், அவரது காதலனையும் அவர்கள் குத்திக் கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே மணப்பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications