For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகுலுக்காக எப்போதும் ஆன்லைன் மோடிலேயே இருந்த திவ்யா ஸ்பந்தனா! பலன் கிடைத்ததா?

காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைதளத்தின் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனாவின் பணி குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆன்லைன் மோடிலேயே இருந்த திவ்யா ஸ்பந்தனா! பலன் கிடைத்ததா?- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைதளத்தின் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனாவின் பணி குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தல்களில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

    குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேச சட்டசபைத் தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.

    இதில் காங்கிரஸ் கட்சியின் தகவல்தொடர்பு மற்றும் சமூக வலைதளத்தின் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திவ்யா ஸ்பந்தனா ஆற்றிய பணி பெரிதும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

    குத்து ரம்யாதான்...

    குத்து ரம்யாதான்...

    திவ்யா ஸ்பந்தனா தமிழில் குத்துப்படம் மூலம் அறிமுகமானவர். இவரின் தாயார் ரஞ்சிதா, இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதால் அரசியல் ஆர்வம் ரம்யாவுக்கும் இருந்தது.

    ராகுலுக்கு முன்னரே டிவிட்டர்

    ராகுலுக்கு முன்னரே டிவிட்டர்

    ராகுல் காந்திக்கு முன்னரே டிவிட்டரில் அக்கவுண்ட் தொடங்கியவர் இவர். ஆட்சி மாற்றம் மற்றும் அரசியலை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வக்கிக்கும் சமூக வலைதளங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாக அண்மையில் நியமிக்கப்பட்டார் திவ்யா ஸ்பந்தனா.

    எப்போதும் ஆன்லைன் மோடு

    எப்போதும் ஆன்லைன் மோடு

    எப்போதும் ஆன்லைன் மோடிலேயே இருந்த திவ்யா ஸ்பந்தனா பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசின் திட்டங்களை கடுமையான விமர்சித்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விளாசி வந்தார்.

    பெருமை பேசிய பாஜக

    பெருமை பேசிய பாஜக

    இருகட்சிகளும் சமூக வலைதளங்களில்வளர்ச்சி என்ற ஸ்லோகத்தை முன்னிலைப்படுத்தின. பாஜக தனது வளர்ச்சி திட்டங்கள் குறித்து பெருமை பேசியது.

    பயன்படுத்திய திவ்யா ஸ்பந்தனா

    பயன்படுத்திய திவ்யா ஸ்பந்தனா

    ஆனால் வளர்ச்சியே இல்லை என்றது காங்கிரஸ். குறிப்பாக சமூக வலைதளங்களில் இதை பெரிதும் பயன்படுத்தினார் திவ்யா ஸ்பந்தனார்.

    பிரதிபலிக்கும் முடிவுகள்

    பிரதிபலிக்கும் முடிவுகள்

    ராகுல்காந்தியை முன்னிறுத்த திவ்யா ஸ்பந்தனா சோஷியல் மீடியாக்களில் பெரும்பாடு பட்டார். பட்டபாட்டை இருமாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் பிரதிபலிப்பதாக உள்ளது.

    English summary
    Divya spandana put much effort to establish Rahul gandhi in the Gujarat and Himachal assembly polls. Its reflecting it seems.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X